Advertisment

இதெல்லாம் இல்லை; 'மீண்டும் மோடி',- பாஜக தேர்தல் நம்பிக்கையை காட்டும் பட்ஜெட்

பிரதமர் நரேந்திர மோடி, “எனக்கு நான்கு பெரிய சாதிகள் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள்” எனத் தெரிவித்திருந்தார். 'பட்ஜெட் இவர்களின் தேவைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்கள் மீது அதிக அக்கறை அளிக்கும்' என நிதியமைச்சர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Modi govt shows its pre poll confidence no populist measures in interim budget

2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி மற்றும் பலர் உள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நரேந்திர மோடி அரசு வியாழக்கிழமை (பிப்.1,2024) தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், ஜனரஞ்சக அறிவிப்புகளில் இருந்து விலகி, நேரடி மற்றும் மறைமுக வரி அடுக்குகளைத் தொடாமல் விட்டு, வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான நம்பிக்கையை தெரிவிக்கிறது.

Advertisment

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த இந்தப் பட்ஜெட், இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக மோடியின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமைகிறது.
இதில் "சமூக நீதி" மீது கவனம் செலுத்தப்பட்டது, கரீப், மகிளாயன், யுவா மற்றும் அன்னதாதா ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு தெளிவான முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, “எனக்கு நான்கு பெரிய சாதிகள் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பட்ஜெட் இவர்களின் தேவைகள், அபிலாஷைகள் மற்றும் நலன்கள் மீது அதிக அக்கறை அளிக்கும் என்றார்.
இது குறித்து நிர்மலா சீதாராமன், “அவர்கள் முன்னேறும்போது நாடு முன்னேறும். நால்வரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தேடலில் அரசாங்க ஆதரவைப் பெறுகிறார்கள்” என்றார்.

சீதாராமன் தனது ஒரு மணி நேர பட்ஜெட் உரையில், “பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பெரும்பான்மைவாதத்தின் விமர்சனத்தையும் மறைமுகமாக எதிர்த்தார். மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை "செயலில் மதச்சார்பின்மை" என்று விவரித்தார்.

பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணையை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் "போராட்டத்துடன்" இதை இணைத்து, நிதி அமைச்சர் கூறினார்.
அப்போது அவர், "முன்பு, சமூக நீதி என்பது பெரும்பாலும் அரசியல் முழக்கமாக இருந்தது. எங்கள் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சமூக நீதி என்பது பயனுள்ள மற்றும் அவசியமான நிர்வாக மாதிரி.

தகுதியுள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கும் செறிவூட்டல் அணுகுமுறையே சமூக நீதியின் உண்மையான மற்றும் விரிவான சாதனையாகும். இது செயல்பாட்டில் உள்ள மதச்சார்பின்மை, ஊழலைக் குறைக்கிறது மற்றும் உறவினர்களைத் தடுக்கிறது” என்றார்.

மேலும், “நரேந்திர மோடி அரசில் வெளிப்படைத்தன்மை உள்ளது. தகுதியான அனைவருக்கும் நன்மைகள் வழங்கப்படுகின்றன, வளங்கள் நியாயமான முறையில் விநியோகிக்கப்படுகின்றன.
அனைவரும், அவர்களின் சமூக நிலையைப் பொருட்படுத்தாமல், வாய்ப்புகளை அணுகலாம். முறையான ஏற்றத்தாழ்வுகளை நாங்கள் நிவர்த்தி செய்கிறோம்” என்றார்.

இதையடுத்து, “விரைவான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் ஆகியவற்றால் எழும் சவால்களை விரிவான பரிசீலனைக்கு ஒரு உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்க சீதாராமன் முன்மொழிந்தார்.
இந்தக் குழு, விக்சித் பாரதத்தின் இலக்கு தொடர்பாக, இந்தச் சவால்களை விரிவாகக் கையாள்வதற்கான பரிந்துரைகளை வழங்கும்” என்றார்.

முன்னதாக, அக்டோபர் மாதம் தனது வருடாந்திர விஜயதசமி உரையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அனைவருக்கும் சமமாக பொருந்தக்கூடிய "ஒரு விரிவான மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கை" தேவை என்று தெரிவித்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையில், பிரதமர் மோடியும் "மக்கள்தொகை அதிகரிப்பு" பற்றி குறிப்பிட்டார், அதைச் சமாளிக்க மத்திய மற்றும் மாநிலங்களுக்கு திட்டங்களை வகுக்க அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், சட்டமன்றங்களில் அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு, மற்றும் கிராமப்புறங்களில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 70% வீடுகளை பெண்களுக்கு தனி அல்லது கூட்டு உரிமையாளர்களாக வழங்குவது உட்பட சீதாராமனின் உரையில், பெண்களின் நலனுக்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உடனடி முத்தலாக் சட்டத்தை சட்டவிரோதமாக்குவதையும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.

மோடி அரசாங்கத்தின் "மனிதாபிமான மற்றும் உள்ளடக்கிய" அணுகுமுறையைப் பாராட்டிய சீதாராமன், “2014க்கு முந்தைய சகாப்தத்தின் ஒவ்வொரு சவாலும் எங்களின் பொருளாதார மேலாண்மை மற்றும் நிர்வாகத்தின் மூலம் சமாளிக்கப்பட்டது. இவை நாட்டை நிலையான உயர் வளர்ச்சியின் உறுதியான பாதையில் கொண்டு சென்றுள்ளன. எங்களின் சரியான கொள்கைகள் மற்றும் உண்மையான நோக்கங்கள் மூலம் இது சாத்தியமானது” என்றார்.

தொடர்ந்து, “மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில், ஜூலை மாதம் முழு பட்ஜெட்டில் சீதாராமன், “விக்சித் பாரத் திட்டத்தை செயல்படுத்த விரிவான சாலை வரைபடத்தை எங்கள் அரசாங்கம் முன்வைக்கும்” என்றார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Modi govt shows its pre-poll confidence, no populist measures in interim budget

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Nirmala Sitharaman Union Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment