Advertisment

'பசுக்கள் மீதான அன்பு மோடி அரசுக்கு காகிதத்தில் மட்டுமே' - ப.சிதம்பரம் ட்வீட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘Modi govt’s love for cow is only on paper’: Chidambaram - 'பசுக்கள் மீதான அன்பு மோடி அரசுக்கு காகிதத்தில் மட்டும் தான்' - ப.சிதம்பரம் ட்வீட்

‘Tamil Nadu news today in tamil,

முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரம், சனிக்கிழமை தனது ட்விட்டரில், "நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பசுக்கள் மீதான அன்பு "காகிதத்தில் மட்டுமே" உள்ளது. கால்நடைகளின் எண்ணிக்கை, 2012 மற்றும் 2019 க்கு இடையில் ஆறு சதவீதம் சரிந்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன" என்று கூறியுள்ளார்.

Advertisment

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம், தனது சார்பாக ட்வீட் செய்யுமாறு தனது குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, அவ்வபோது அவரது அக்கவுண்டில் இருந்து ட்வீட் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்தநிலையில் இன்று சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில், "என் சார்பாக இந்த ட்வீட்டை பதிவிடும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் எனது குடும்பத்தினர் இந்த ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர்.

19, 2019

50 சதவீதம்பேர் வேலைவாய்ப்பு நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர். 30 சதவீத்துக்கும் மேலானோர் நிலைமை மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர். அப்படி என்றால் வேலையில்லா திண்டாட்டம் என்பது மிக மோசமாக இருக்கிறது என்றே பொருள்" எனக் கூறியுள்ளார்.

19, 2019

இதுபோலவே மற்றொரு ட்வீட்டில் "2012-ம் ஆண்டை ஒப்பிடுகையில் நாடுமுழுவதும் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்து விட்டதாக 2019-ம் ஆண்டின் கால்நடை கணக்கெடுப்பு கூறுகிறது. மாடுகள் மீதான உங்கள அன்பு வெறும் காகிதத்தில் தான் இருக்கிறது என்று பொருள். அதற்காக இனப்பெருக்கம் அல்லது எண்ணிக்கையை அதிகரிப்பது என பொருள் கொள்ளக்கூடாது" எனக் கூறியுள்ளார்.

நாடுமுழுவதும் உள்ள கால்நடைகள் எண்ணிக்கை குறித்து 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் பல்வேறு மாநிலங்களில் நாட்டு மாடு இனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறையினர் கடந்த அக்.16ம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment