பாரம்பரிய தங்க நிற தோதி-குர்தா அணிந்து, ராமர் கோயிலின் ‘பூமி பூஜை’ நிகழ்வில் கலந்து கொண்டார்
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் நகரமான அயோத்யாவுக்குத் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, பாரம்பரிய தங்க நிற தோதி-குர்தா அணிந்து, ராமர் கோயிலின் ‘பூமி பூஜை’ நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது பல நூற்றாண்டுகள் காத்திருப்பு முடிந்துவிட்டதாகக் கூறினார்.
Advertisment
அடிக்கல் நாட்டும் விழாவுக்கு பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த எங்கள் ராம் லல்லாவுக்கு இப்போது ஒரு பெரிய கோயில் கட்டப்படும் ”என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் மகாராஜ், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாக மாறும் என்றார்.
Advertisment
Advertisements
“இது நமது பக்தியின் அடையாளமாக, நமது தேசிய உணர்வாக மாறும். இந்த கோயில் கோடிக்கணக்கான மக்களின் வலிமையான ஒற்றுமையை சக்தியையும் குறிக்கும். இது எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் ”என்று பிரதமர் மோடி கூறினார்.
ராம் கோயில் கட்டுமானத்தை "நாட்டை ஒன்றிணைக்கும் ஒரு கருவி" என்று கூறி, அயோத்தியில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்த பிரதமர் மோடி, "ராமர் இருப்பதை ஒழிப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்னும் நம் இதயத்தில் வாழ்கிறார், இது நமது கலாச்சாரத்தின் அடிப்படையாகும் . ராம் எல்லா இடங்களிலும் இருக்கிறார், ராம் அனைவருக்கும் சொந்தமானவர்" என்றார்.
ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வில் பிரதமர் மோடி - (Source: Info dept)
உச்சநீதிமன்றம் 10 மாதங்களுக்கு முன்பு அளித்த வரலாற்றுத் தீர்ப்பு, இந்த கொண்டாட்டங்களுக்கு, ராமர் கோயில் கட்டுவதற்கும் வழி வகுத்தது.
தற்செயலாக, ஆகஸ்ட் 5ம் தேதி, 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஓர் ஆண்டு நிறைவையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து தரமிறக்கியதையும் குறிக்கிறது. பிரிவு 370 மற்றும் ராமர் கோயில் ஆகியவை பாஜகவின் இரட்டை கருத்தியல் பலகைகளாகும்.
அயோத்தி சென்ற பிறகு, பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத்துடன் ஹனுமான் காரி கோவிலில் பிரார்த்தனை செய்தார், அங்கு தலைமை பூசாரி பிரதமருக்கு வெள்ளி ‘mukut’ வழங்கினார். அங்கிருந்து ராம் ஜன்மபூமிக்குச் சென்று ராம் லல்லாவுக்கு ‘sashtang pranam’ செய்தார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான ராமர் கோயிலின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம். “நம் நாடு 'Vasudev Kutubhkam’ல் நம்பிக்கை கொள்கிறது. அதாவது உலகம் ஒரு குடும்பம். அனைவரையும் உடன் அழைத்துச் செல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். இன்று ஒரு புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம்”என்று பகவத் கூறினார்.
பிரதமர் மோடி ஒரு தெய்வீக தாவரமாகக் கருதப்படும் பரிஜாத் மரக்கன்றையும் நடவு செய்தார். தலைமை பூசாரியின் சமஸ்கிருத மந்திரங்களுடன் விழா தொடங்கியது.
பூமி பூஜைக்கு தூய வெள்ளியால் செய்யப்பட்ட 40 கிலோ செங்கல் பயன்படுத்தப்பட்டது. 1,500 க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து மண் கொண்டு வரப்பட்டது, அதே நேரத்தில் 2,000 இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் பயன்படுத்தப்பட்டது. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று பொறிக்கப்பட்ட செங்கற்களும் பூஜையில் பயன்படுத்தப்பட்டன.
புதன்கிழமை, அயோத்தி ஒரு கோட்டையாக மாறியது. அங்கு குடியிருப்போரை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டுச் சென்றது. ஒவ்வொரு கூரையிலும் காவி கொடிகள் பறந்தன. பிரதமரை வரவேற்பதற்காக ஒவ்வொரு அயோத்தியே வண்ணங்களில் விழாக் கோலம் பூண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil