படேல் சிலை திறப்பு : குஜராத் மாநிலத்தில் ரூ. 3,000 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லப்பாய் பட்டேல் சிலையை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (31.10.18) திறந்து வைத்தார். இந்த நாளை குஜராத் மக்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லப்பாய் பட்டேலுக்கு, குஜராத்தில் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Sardar Patel Statue of Unity in Gujarat Inauguration Today LIVE Updates: படடேல் சிலை திறப்பு !
12.00 AM : குஜராத்தில் நடைப்பெற்ற உலகிலேயே உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.
11.30 AM : சிலை திறப்பு விழாவில் மோடி பேசியதாவது '”இந்த நாள் இந்திய வரலாற்றில் நினைவுகூரப்படும் நாளாக இருக்கும். எந்த இந்தியரும் இந்நாளை மறக்க மாட்டார். இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு சர்தார் வல்லபாய் படேலே காரணம்.
சுதந்திரத்துக்குப் பிறகு அவர் மேற்கொண்ட முயற்சிகளால்தான், இன்றைய இந்தியா உருவானது. படேலின் பாதையைப் பின்பற்றி, இந்தியா மிகப்பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக மாறிவருகிறது'” என்றார்.
11.15 AM : உலகிலேயே உயரமான படேல் சிலை திறக்கப்பட்ட தருணம். வீடியோவாக
#WATCH: Inauguration of Sardar Vallabhbhai Patel's #StatueOfUnity by PM Modi in Gujarat's Kevadiya pic.twitter.com/PKMhielVZo
— ANI (@ANI) 31 October 2018
10.50 AM : உலகிலேயே உயரமான வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி
காலில் இருந்து தலை வரை உள்ள அடி 597 ஆகும்.
10.40 AM : 182 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
PM Narendra Modi inaugurates Sardar Vallabhbhai Patel's #StatueOfUnity pic.twitter.com/c3wfzLBkH4
— ANI (@ANI) 31 October 2018
10.30 AM : உள்ளூர் ஊடகங்கள் மட்டுமில்லாமல் வெளி நாட்டு ஊடகங்களிலும் இன்று படேல் சிலை திறப்பு நிகழ்ச்சி நேரலையாக ஒளிப்பரப்படுகிறது.
10.00 AM : படேல் சிலை நாளை முதலே பார்வையாளர்ளுகாக திறக்கப்படுகிறது. டிக்கெட் விலை குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. பெரியவர்களுக்கான டிக்கெட் விலை ரூ. 120, குழந்தைகளுக்கு டிக்கெட் விலை
ரூ. 60
9.30 AM : படேல் சிலை திறப்பு ஏற்பாடுகள் திவீரமாகியுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Final preparations are on at Kevadia Colony in Narmada district for the unveiling of Statue of Unity. @IndianExpress pic.twitter.com/xTlcYtabdS
— parimal dabhi (@parimaldabhi) 31 October 2018
9.00 AM : வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா கேட் பகுதியில், ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது. இதில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
I participated in #RunForUnity last year as well. It's a day of extreme significance & I will try my best to witness it (inauguration of Sardar Vallabhbhai Patel's #StatueOfUnity): Gymnast Dipa Karmakar at "Run for Unity" in Delhi pic.twitter.com/Np2KGR1DAz
— ANI (@ANI) 31 October 2018
8.00 AM : பிரதம்ர் நரேந்திர மோடி படேல் சிலை திறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
देश को एकता के सूत्र में पिरोने वाले लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी जयंती पर कोटि-कोटि नमन।
We bow to the great Sardar Patel, the stalwart who unified India and served the nation tirelessly, on his Jayanti.
— Narendra Modi (@narendramodi) 31 October 2018
அந்த பதிவில், ”ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, நாட்டுக்கு அயராது உழைத்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு தலைவணங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இதற்கான அடிக்கலை நாட்டினார். அதன் பின்பு,L&T நிறுவனம், இந்த 182 மீட்டர் உயரச் சிலையை 33 மாதங்களில் 3,000 கோடியில் உருவாக்கியுள்ளது. சீனாவில், ஸ்பிரிங் கோவிலில் உள்ள தற்போதைய உலகின் மிக உயரமான 128 மீட்டர் புத்தர் சிலையை உருவாக்க 11 ஆண்டுகள் ஆனது குறிப்பிடத்தக்கது.
சிலையை வடிவமைத்த 90 வயது சிற்பி,சுதர், வல்லபாயின் உருவ அமைப்பை சிலை ஒத்திருப்பதை உறுதி செய்வதற்காக பட்டேலை நேரில் பார்த்தவர்களிடம் பேசியும் 2,000 புகைப்படங்களைப் பார்த்தும் இதை உருவாக்கியுள்ளார்.
இச்சிலையை அடைய குஜராத் அரசு 3.5 கிலோ மீட்டர் நீள சாலை அமைத்துள்ளது. இந்நிலையில், பட்டேலின் 143-வது பிறந்தநாளான இன்று சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த விழாவை, டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவைப் போன்று கோலாகலமாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
3 மணிநேரம் நடைபெறும் இந்த விழாவில், விமானப்படை விமானங்களின் சாகசங்கள் இடம்பெற உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.