Advertisment

75,000 பேருக்கு பணி நியமன ஆணை; தீபாவளிக்கு முன்னதாக வழங்குகிறார் மோடி

அரசுப் பணிக்கான மாபெரும் வேலைவாய்ப்பு இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி; தீபாவளிக்கு முன்னதாக 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க முடிவு

author-image
WebDesk
Oct 20, 2022 17:17 IST
New Update
75,000 பேருக்கு பணி நியமன ஆணை; தீபாவளிக்கு முன்னதாக வழங்குகிறார் மோடி

அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்ததற்கு இணங்க, பிரதமர் நரேந்திர மோடி 38 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப்பட்ட 75,000 பேருக்கு அக்டோபர் 22 சனிக்கிழமையன்று பணி நியமனக் ஆணைகளை வழங்குகிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தீபாவளிக்கு சில நாட்கள் முன்னதாக நடைபெற உள்ளது.

Advertisment

ரோஸ்கர் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) என்று அழைக்கப்படும் விழாவில் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இயக்கத்தை தொடங்கி வைப்பார் என்று பிரதமர் அலுவலகத்தின் அறிக்கை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஒரு மாதத்தில் கத்தார் ஃபிபா உலகக் கோப்பை; பரிதாப நிலையில் இறந்த 9 இந்திய தொழிலாளர்களின் குடும்பங்கள்

"இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்" என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறியது. அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போதுள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் "மிஷன் முறையில்" நிரப்புவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருகிறது, என்றும் அறிக்கை கூறுகிறது.

புதிய பணியாளர்கள் குரூப் ஏ மற்றும் பி (கெசட்டட்), குரூப் பி (நான் - கெசட்டட்) மற்றும் குரூப் சி என பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப்படுவார்கள். மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், கீழ்நிலை பிரிவு எழுத்தர்கள் (LDC), ஸ்டெனோ, தனிப்பட்ட உதவியாளர்கள் (PA), வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் பல்பணி ஊழியர்கள் (MTS) ஆகிய பணியிடங்களிலும் புதிய பணி நியமனம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த அமைச்சகங்கள் தாங்களாகவோ அல்லது மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC), அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலமாகவோ ஆட்சேர்ப்புகளை மேற்கொள்கின்றன.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 10 லட்சம் அரசு வேலைகள் வழங்கும் முடிவை பிரதமர் அறிவித்தார். 2024ல் தேசிய ஜனநாயக அரசாங்கம் மூன்றாவது முறையாக பதவியேற்க முற்படுவதற்கு முன், "வேலையில்லா திண்டாட்டம்" குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளிடம் இருந்து அகற்றுவதற்கான ஒரு வழியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் இளைஞர்களுக்கான (15-29 வயதுக்குட்பட்ட) வேலையின்மை விகிதம் 20-க்கும் அதிகமாக உள்ளது. கடந்த பல காலாண்டுகளில் இந்த சதவீதம் வேலைகள் இல்லாமை எனக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தீனி அளிக்கிறது. ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் காங்கிரஸ் முன்னிலைப்படுத்திய விஷயங்களில் வேலையின்மையும் ஒன்று.

கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சியானது தனியார் துறையில் மந்தமான ஆட்சேர்ப்புக்கு வழிவகுக்கும் நிலையில் இருப்பதால், இந்த நடவடிக்கை அரசாங்க வேலைகள் மூலம் "வேலைகள்" கதையை பாதிக்கும் ஒரு வியூக அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

"புதிய இந்தியாவின் அடிப்படை அதன் இளைஞர் சக்தியாகும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரு.மோடி தொடர்ந்து உழைத்து வருகிறார். 1.5 ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் பணி முறையில் 10 லட்சம் ஆட்சேர்ப்பு செய்ய திரு. மோடியின் உத்தரவு இளைஞர்களிடையே புதிய மாற்றத்தையும் நம்பிக்கையையும் கொண்டு வரும்" என்று ஜூன் மாதம் மோடியின் அறிவிப்புக்குப் பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்திருந்தார்.

ஒவ்வொரு ஐந்தாவது பதவியும் மார்ச் 2019 இல் காலியாக இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் காட்டுகின்றன, அதாவது கொரோனா பரவலுக்கு ஒரு வருடம் முன்பு. 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் படிகள் குறித்த வருடாந்திர அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதியன்று, மத்திய அரசுப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை (யூனியன் பிரதேசங்கள் உட்பட) 31.43 லட்சமாக இருந்தது. அனுமதிக்கப்பட்ட மத்திய அரசு பணியாளர்களின் எண்ணிக்கை 40.66 லட்சம், எனவே தோராயமாக 22.69 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.

SSC மற்றும் UPSC ஆகியவை முறையே 1,85,734 மற்றும் 27,764 பணியிடங்களுக்கு அறிவிப்பு செய்து 2017-18 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் முறையே 1,74,744 மற்றும் 24,836 விண்ணப்பதாரர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Modi #Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment