Maulshree Seth
அயோத்தியில் பிரம்மாண்டமாக அமைய உள்ள ராமர் கோவிலுக்கு வருகிற 5ம் தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. கோலாகலமாக நடைபெற உள்ள இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
மிகவும் சிறப்பாக நடைபெற உள்ள இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் பிரதமருடன் பங்கேற்கிறார். பிரதமரும், ஆர்.எஸ்.எஸ். தலைவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், பிரதமர் மோடி, பூமி பூஜை நிகழ்வின் போது, கோயில் மற்றும் ராமாயணாவின் குறியீடுகளை குறிக்கும் வகையில் அஞ்சல் தலையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அன்லாக் 3.0 வழிமுறைகள்: கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
இந்நிகழ்ச்சிக்கு அயோத்தியில் ஏற்பாடுகள் நடந்து வருகின்ற நிலையில், ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை “பக்தர்கள் ஆகஸ்ட் 5 ம் தேதியே அயோத்தியை வர ஆர்வமாக இருக்க வேண்டாம்” என்று “ராம் பக்தர்களிடம்” வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், அவர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளித்தது. இந்நிகழ்வு முடிந்த பிறகு, பக்தர்களுக்கு வருகை புரிய வாய்ப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
அயோத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஒய்.பி. சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், ஆகஸ்ட் 5 ஆம் தேதி அஞ்சல் முத்திரைகளும் தொடங்கப்படும். இந்த முத்திரைகளில் ஒன்று ராம் கோயிலின் அடையாள மாதிரியாகவும், மற்றொன்று மற்ற நாடுகளில் ராமின் முக்கியத்துவத்தை சித்தரிக்கும் காட்சிகளாகும் இடம் பெறும்" என்று கூறியுள்ளார்.
"உலகெங்கிலும் ராமின் கலாச்சார இருப்பை" சித்தரிக்க அயோத்தி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நாடுகளில் இருந்து பெரிய சுவரொட்டிகளையும், ராம் லீலாவின் சின்னங்களின் கட்-அவுட்களையும் தயாரித்து வருகிறது, மேலும் இவை ராம் கோயில் தளத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்படும் என்றார்.
அயோத்தியில் உள்ள சாகேத் டிகிரி கல்லூரியில் இருந்து பிரதமரால் வரும் 4.5 கி.மீ பாதையில் 25 இடங்களில், ராம் சரித்ரா மனாஸை இடைவிடாமல் பாராயணம் செய்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். .
ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு முன் நகரத்தின் அனைத்து இடங்களின் சுவர்கள் மற்றும் தூண்களில் ராமின் படங்கள் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளால் வரையப்பட்டு “ரங்கோலி” அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டம்: பெருமளவு இடங்களில் படை விலக்கம் என சீனா அறிவிப்பு
இதற்கிடையில், தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு "பூமி பூஜை" க்காக அயோத்திக்கு வந்து சேர முயற்சிக்க வேண்டாம் என்று ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், 1984 ஆம் ஆண்டில் ராம் கோயில் இயக்கம் தொடங்கியது என்றும், அதன் பின்னர் கோடிக்கணக்கான “ராம் பக்தா” ஆதரவு அளித்துள்ளது, எனவே இந்த சந்தர்ப்பத்தில் வர வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கும் என்றும் கூறினார். இருப்பினும், தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.
"இவ்வாறு, ராம் ஜன்மா பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அனைத்து ராம் பக்தர்களிடமும் அயோத்தி வர ஆர்வமாக இருக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றார், மேலும் அனைவரையும் மாலையில் தங்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil