scorecardresearch

யோகி அரசில் அமைச்சரான மோடியின் தளபதி… யார் இந்த ஏ.கே.ஷர்மா?

ஒரு மூத்த மத்திய அரசு அதிகாரி கூற்றுப்படி, பிரதமருக்கு நம்பகமான அதிகாரிகள் அடங்கிய குழு இருப்பது வழக்கமானது அல்ல, ஆனால் அத்தகைய குழுவிலும் ஏ.கே சர்மா தனித்து நின்றார்

குஜராத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்ந்து மத்திய அரசுக்கு வந்த ஒரே அதிகாரியோ அல்லது மிகப்பெரிய பின்புலத்தை கொண்டவரோ அவர் இல்லை. ஆனால், ஏ.கே சர்மா தனியாக அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி நகர்ந்தார்.

சுமார் 20 ஆண்டுகளாக, மோடியின் நம்பிக்கையான அதிகாரி என பெயர் எடுத்த அவர், கடந்தாண்டு ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, பாஜகவின் எம்.எல்.ஏ-வாக உருவெடுத்தார். வெள்ளிக்கிழமை அன்று ,59 வயதான அவர், உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றார்.

ஒரு மூத்த மத்திய அரசு அதிகாரி கூற்றுப்படி, பிரதமருக்கு நம்பகமான அதிகாரிகள் அடங்கிய குழு இருப்பது வழக்கமானது அல்ல, ஆனால் அத்தகைய குழுவிலும் ஏ.கே சர்மா தனித்து நின்றார். சர்மா செல்லும் அனைத்து பாதையிலும், பிரதமர் மோடியின் முத்திரை இருப்பதை புரிய முடிந்தது. இது, மற்ற அதிகாரிகளை காட்டிலும் கூடுதல் பலம் சர்மாவுக்கு கிடைக்க உதவியது.

மோடி முதல்வராக இருந்த சமயத்தில், அவரது தனிப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி நம்பிக்கையை பெற்றார் சர்மா.

மோடியின் முதல்வர் அலுவலகத்தில் சிறப்பு பணியில் இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஷ் பிரம்பட் கூற்றுப்படி, நம்பிக்கையான அதிகாரிகள் வேண்டும் என மோடி கூறினார்.சர்மா, பிகே மிஸ்ரா மற்றும் அனில் முகிம் ஆகியோரை பரிந்துரைத்தேன் என்றார்.

பல மாவட்டங்களில் சர்மா செய்த செயலின் பலனும், தொழில்துறையில் அவருக்கு இருந்த அனுபவமும், 2001இல் பணியில் சேர சர்மாவுக்கு வழிவகுத்தது. மேலும், குஜராத் உச்சி மாநாடுகளில் முக்கிய நபராக வளம்வர உதவியது. முதலீடுகளைப் பெறுவதற்காக மோடியுடன் சர்மா வெளிநாடு சென்றுள்ளதாகவும் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மிஸ்ரா ,முகீம் ஆகியோரை விட இளையவரான சர்மா, முதல்வர் அலுவலகத்தில் நீண்ட காலம் பதவி வகித்தார். மத்திய அரசுக்கு பணிக்கு பிரதிநிதிகளாக கூட அவர் செல்லவில்லை என கூறப்படுகிறது. சர்மா ஒரு வருடம் பயிற்சிக்கு சென்றபோதும், நாங்கள் அவரது பதவியை காலியாக வைத்திருந்தோம் என பிரம்மபட் கூறினார்.

மோடி டெல்லிக்கு சென்றதிலும், சர்மாவின் பங்கு இருந்ததாக அதிகாரி கூறுகிறார். மோடி வாரணாசியில் போட்டியிட முடிவு செய்த போது, உ.பி விவகாரங்களின் தகவலை அறிய சர்மாவை தான் களமிறக்கினார். சர்மா உத்தரப் பிரதேசத்தில் மௌவை சேர்ந்தவர் ஆவர். அவரது தந்தை மௌ ரோட்வேஸ் பேருந்து நிலையத்தின் மூத்த பொறுப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மோடி டெல்லிக்கு வந்த பிறகு, பிரதமர் அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பொறுப்பு சர்மாவுக்கு வழங்கப்பட்டது. பின்னர், மே 2020இல், கொரோனாவால் பொருளாதாரத்தில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்ட போது, சர்மாவுக்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

ஏப்ரல் 2021 இல், இரண்டாவது கோவிட் அலையில் போது, வாரணாசி கடுமையாக பாதிக்கப்பட்ட போது, சர்மா அந்த மாவட்டத்தின் “Covid prabhari” என்று அழைக்கப்பட்டார். மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய சர்மா, DRDO மருத்துவமனை மற்றும் தொலை ஆலோசனை செயலியை அமைப்பதை மேற்பார்வையிட்டார். மேலும், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் இயக்கி இயக்கினார்.

அந்த நேரத்தில், வாரணாசியில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல் அலையின் போது அப்பகுதியில் மையத்தின் செயல்பாடு பெரிதாக இல்லை. சர்மா களத்தில் இறங்கும் சமயத்தில், பிரதமர் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிவந்தது என்றார். மற்றொரு அதிகாரி, பிரதமர் அலுவலகம் ஆக்சிஜன், முக்கியமான மருந்துகள் உபகரணங்களை பெறுவதில் உதவியது. பின்னர், மோடி அனைத்து மாநிலங்களையும் கோவிட் 19 விவாகரத்தில் வாரணாசி மாதிரியை பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

பூமிஹார் பிராமணரான ஷர்மா, கிழக்கு உ.பி.யில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவை சேர்ந்தவர் மட்டுமின்றி பாஜக ஆதரவாளர் ஆவர். இப்பகுதியில் ஏற்கனவே பிஎஸ்பியின் கோசி மக்களவை எம்பி அதுல் சிங் ராய், முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய ஜே&கே லெப்டினன்ட் கவர்னருமான மனோஜ் சின்ஹா ​​போன்ற பல வலுவான பூமிஹார் பிராமண முகங்கள் உள்ளன.

இவர் எம்.எல்ஏ ஆன போது, அவரது அரசியல் திறன்கள் குறித்து சில சந்தேகங்கள் இருந்தபோதிலும், உ.பி அதிகாரத்தின் உயர்மட்டத்திற்கு பதவி உயர்வு பெற்றப்போது, அனைத்து மறைய தொடங்கின. கடந்த ஆண்டு ஷர்மா சட்டசபைக்கு வரவழைத்த போது, ஒருவர் கூறுகையில், “வெளிப்படையாக அவர் ஏதோ ஒரு பணிக்காக வந்திருக்கிறார். ஆனால் பிரதமரின் மனம் யாருக்கும் தெரியாது என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Modi man ak sharma in up govt