Advertisment

"ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஜே.எஃப்.கே புத்தகமே பதில்": மோடி எதைக் குறிப்பிடுகிறார்?

சீனா மீதான மோடி அரசின் நிலைப்பாடு மற்றும் டிரம்பின் அழைப்பை ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரியின் புத்தகத்தைப் படிக்குமாறு பிரதமர் மோடி பரிந்துரைக்கிறார்.

author-image
WebDesk
New Update
JFK Book

JFK’s Forgotten Crisis: Tibet, the CIA, and the Sino-Indian War

Advertisment

புத்தகத்தை எழுதியவர் - புரூஸ் ரீடல் 

பக்கங்கள்: 248

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, 1962-ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு எப்படி அமெரிக்காவின் உதவியை நாடினார் என்று குறிப்பிட்டார். "யாராவது வெளியுறவுக் கொள்கையில் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால் அல்லது புரிந்து கொள்ள விரும்பினால், 'JFK's Forgotten Crisis' என்ற புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்," என்று பிரதமர் கூறினார்.

Advertisment
Advertisement

"இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கும் இடையே நடந்த கடித உரையாடல் மற்றும் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. நாடு நிறைய சவால்களை எதிர்கொண்ட நேரத்தில் வெளியுறவுக் கொள்கை என்ற பெயரில் விளையாடப்படும் ஆட்டங்களை புத்தகம் வெளிப்படுத்துகிறது" என்று மோடி நேரடியாகக் குறிப்பிடாமல், 1962 இந்தியா-சீனா போரைப் பற்றி பேசினார்.

மோடி குறிப்பிட்டுள்ள புத்தகம் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) முன்னாள் அதிகாரி புரூஸ் ரீடால் எழுதப்பட்டது, மேலும் இது 'JFK's Forgoten Crisis: Tibet, the CIA and the Sino-Indian War' என்று அழைக்கப்படுகிறது. 1962 நவம்பரில் கென்னடிக்கு, நேரு எழுதிய கடிதங்களை மேற்கோள் காட்டி, இந்தியத் தலைமை மோசமாகத் தயாராகி, திகைத்துப் போனதாகவும், 1962ல் சீன ஆக்கிரமிப்பைத் தடுக்க போர் விமானங்களைத் நாடிடியதாகவும் புத்தகம் கூறுகிறது.

இந்தியா தனது நிலப்பரப்பை விரைவாக சீனாவிடம் இழந்து பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வரும் நிலையில், நேரு தனது கடிதத்தில் "இந்தியாவிற்கு சீன ஆக்கிரமிப்பைத் தடுக்க விமான போக்குவரத்து மற்றும் ஜெட் போர் விமானங்கள் தேவை... எங்களிடமிருந்தும், நமது நண்பர்களிடமிருந்தும் இன்னும் நிறைய முயற்சிகள் தேவைப்படும்" என்று கூறினார். விரைவில், நேரு கென்னடிக்கு மற்றொரு கடிதம் எழுதினார், அதை நவம்பர் 19 அன்று அமெரிக்காவிற்கான அப்போதைய இந்தியத் தூதராக இருந்த பி.கே. நேரு வழங்கினார்.

“பி.எல்.ஏ-வை (சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம்)  தோற்கடிக்க விமானப் போரில் கூட்டாளியாகி சீனாவுக்கு எதிரான போரில் சேருமாறு கென்னடியிடம் நேரு கேட்டுக் கொண்டார். இந்தியப் பிரதமர் விடுக்கும் முக்கியமான கோரிக்கை இது. கொரியாவில் சீன கம்யூனிஸ்ட் படைகளுடன் அமெரிக்கப் படைகள் போர் நிறுத்தத்தை எட்டிய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, கம்யூனிச சீனாவுக்கு எதிரான புதிய போரில் சேருமாறு இந்தியா ஜே.எஃப்.கே-யிடம் கேட்டுக் கொண்டது” என்று புத்தகம் கூறுகிறது.

"குறைந்தபட்சம் 12 ஸ்க்வாட்ரான்கள், சூப்பர்சோனிக் போர் விமானங்கள் அவசியம். எங்களிடம் நவீன ரேடார் இல்லை. அமெரிக்க விமானப்படை வீரர்கள் எங்கள் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது இந்த போர் விமானங்கள் மற்றும் ரேடார் நிறுவல்களை நிர்வகிக்க வேண்டும்," என்று நேரு கடிதத்தில் எழுதியதாக, ரீடல் மேற்கோள் காட்டினார். கூடுதலாக, அவர் திபெத்தில் தாக்குவதற்கு "B-47 குண்டுவீச்சுகளின் இரண்டு படைப்பிரிவுகளை" கோரினார்.

இந்த குண்டுவீச்சு விமானங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படாது, மாறாக "சீனாக்கு எதிராக" மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நேரு கென்னடிக்கு உறுதியளித்தார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் வரலாற்றாசிரியர் அலுவலகத்தின் இணையதளம், ‘அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள், 1961-1963, தெற்காசியா’ என்ற பிரிவின் கீழ், நவம்பர் 19, 1962 அன்று இந்தியத் தூதரகத்திலிருந்து வெளியுறவுத் துறைக்கு அனுப்பப்பட்ட தந்தியை மேற்கோள் காட்டியுள்ளது.

ஒரு நாள் முன்னதாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீன தயாரிப்புகளை இந்தியா நம்பியிருப்பது தேசிய பாதுகாப்பில் கவலை அளிக்கிறது என்று கூறினார். ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் தோல்வியை இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் இருப்பதோடு தொடர்புபடுத்தினார். இதற்கு பதிலளுக்கும் விதமாக இந்த புத்தகத்தை மோடி பரிந்துரைத்துள்ளார்.

Rahul Gandhi Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment