கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்திலும், அக்டோபரில் குஜராத்தில் நடந்ததைப் போலவே, வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் கான்வாய் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டது.
அகமதாபாத்தில் வியாழக்கிழமை ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது கான்வாயை நிறுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அரசியலில் எதிர்வாதங்களை எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடியின் நுண்ணுணர்வும் சேவை மனப்பான்மையையும் உறுதிப்படுத்த பா.ஜ.க இந்த சம்பவத்தைப் பயன்படுத்தினாலும், கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமரின் கான்வாய் இதேபோல் ஆம்புலன்ஸுக்கு வழி விட்டதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சி, இந்த காட்சிகள் திட்டமிடப்பட்டதாகக உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த வீடியோ வெளியானதும், பாஜக தலைவர் அமித் மாளவியா, “அகமதாபாத்தில் பிரதமர் மோடியின் வாகனம் ஆம்புலன்ஸுக்கு வழி விடுகிறது. அதற்கு நுண்ணுணர்வு தேவை. தனது பாரத் ஜோடோ யாத்ராவிற்கு இடம் தேவைக்காக வளரும் பயிர்கள் அறுக்கப்படுகிற ராகுல் காந்தியின் மன உறுதியும் இல்லாத பொறுப்பற்ற நடத்தையுடன் ஒப்பிடுங்கள். பிரதமர் மோடியை மக்கள் நம்புவதில் ஆச்சரியமில்லை.” என்று கூறினார்.
“பிரதான் சேவக் (மக்கள் சேவகர்) என்ற நேரடி உதாரணத்தைக் கண்டு பெருமை அடைகிறேன்” என்று கூறிய ராஜ்யசபா எம்.பி கே லக்ஷ்மன், பிரதமர் தனது முன்னுரிமைகளை தெளிவாக விளக்குகிறார்” என்று கூறுகிறார்.
பிரதமர் மோடியின் கான்வாய் ஆம்புலன்ஸுக்கு வழிவிடத் தொடங்கியதால், இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு ட்விட்டரில் ட்ரெண்டாகத் தொடங்கியதால், காங்கிரஸ் பா.ஜ.க-வை கடுமையாகத் தாக்கியது.
இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி இந்தியில் பதீட்ட ட்வீட்டில், “ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் எந்த ஒரு பாதுகாப்பு சோதனையும் இல்லாமல் பிரதமருக்கு மிக அருகில் ஆம்புலன்ஸ் திடீரென வந்து, அவரது வாகனத்தை முந்திச் செல்வது அவரது பாதுகாப்பில் ஆழமான குறைபாடு ஆகும். உங்கள் கருத்து என்ன???” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீனிவாஸ் பி.வி இந்த தவறை விசாரணை செய்ய வேண்டும் என்று வெள்ளிகிழமை கூறினார். அவர் இந்தியில் பதிவிட்ட ட்வீட்டில், “தேர்தலின் போது, பிரதமர் இருக்கும் இடத்தில், பாதுகாப்பு சோதனை இல்லாமல் ஆம்புலன்ஸ் திரும்பத் திரும்ப வருவது தற்செயல் நிகழ்வு அல்ல. பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகர் பட்டியலில் ஆம்புலன்ஸ் இடம் பெறிருக்க வேண்டும்” என்று அவர் கிண்டலாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மாளவியாவின் ட்வீட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “ஏய்! முதன்மை போலி செய்தி வியாபாரி, இது சலிப்பை ஏற்படுத்துகிறது. திரைக்கதை எழுதுபவரை மாற்றுவதற்கான நேரம் இது.” என்று தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அலோக் ஷர்மா செய்தி தொலைக்காட்சியான ஆஜ் டாக்கிடம் பேசும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “பிரதமரின் கான்வாய்க்காக ஆம்புலன்ஸ் நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் காத்திருந்து பின்னர் சென்றது ” என்று இந்திய இளைஞர் காங்கிரஸின் ட்விட்டர் கணக்கு கூறியுள்ளது. “ஆம்புலன்ஸ் ஸ்டண்ட் முழு உண்மை” அதை நிரூபிக்க தன்னிடம் வீடியோக்கள் இருப்பதாகவும் அலோக் சர்மா கூறினார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் சமூக ஊடகத் தலைவர் ஒய் சதீஷ் ரெட்டி, “தேர்தல் & ஆம்புலன்ஸ் சிறப்பு # மோடி ஜி” என்று ட்வீட் செய்துள்ளார்.
நவம்பர் 9ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள சம்பி என்ற இடத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக தனது கான்வாய்வை நிறுத்தினார். “மனிதாபிமானத்தை விட முக்கியமானது எதுவுமில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தக் காட்சி அதையே கூறுகிறது” என்று இமாச்சல பிரதேச பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
குஜராத் பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அக்டோபர் மாதம், ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்க மோடியின் கான்வாய் நிறுத்தப்பட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள தூர்தர்ஷன் சென்டர் அருகே தனது பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு காந்திநகரில் உள்ள ராஜ்பவனுக்கு மோடி செல்லும் போது இந்த சம்பவம் நடந்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“