கர்நாடகாவில் பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை திறந்து வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர, நான் ஏழைகளுக்காகப் பணியாற்றுகிறேன். காங்கிரஸ் எனக்கு கல்லறை தோண்டுவதில் தீவிரமாக உள்ளது என்று காங்கிரஸை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலை பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று பிரதமர் மோடி கூறினார்.
கர்நாடக மாநிலம், மாண்டியாவில் பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும், மைசூரு-குஷால்நகர் நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
இந்த விரைவுச் சாலை, இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை ஒன்றரை மணி நேரமாகக் குறைத்து, இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். “நீண்ட காலமாக, இரண்டு நகரங்களுக்கு இடையே பயணம் செய்பவர்கள் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதாக புகார் கூறுகின்றனர். ஆனால், இப்போது அதிவேக நெடுஞ்சாலையால் பயணம் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்துவிடும். இப்பகுதி முழுவதும், பொருளாதார வளர்ச்சி ஊக்கம் பெறும்” என்று மோடி கூறினார்.
பெங்களூரு முதல் துறைமுக நகரமான மங்களூரு வரையிலான மழைக்காலத்தில் நிலச்சரிவு காரணமாக பெங்களூரு சாலை இணைப்பு சவால்களை எதிர்கொண்டதைக் குறிப்பிட்ட மோடி, மைசூரு – குஷால்நகர் நெடுஞ்சாலையின் விரிவாக்கம் உதவியாக இருக்கும் என்றார். இந்த திட்டம் கர்நாடக தலைநகரில் இருந்து மங்களூருவை இணைக்கும் மாற்று வழியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அரசு வளர்ச்சிப் பணிகளைச் செய்யும்போது காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும் என்ன செய்கிறார்கள்? மோடிக்கு கல்லைறை தோண்டலாம் என்று காங்கிரஸ் கனவு காண்கிறது. அவர்கள் மோடிக்கு கல்லறை தோண்டுவதில் மும்முரமாக உள்ளனர். அந்த நேரத்தில், மோடி பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் மோடிக்கு கல்லறை தோண்டுவதில் மும்முரமாக உள்ளனர். ஏழைகளின் நலனுக்காக மோடி மும்முரமாக செயல்பட்டு வருகிறார்” என்று பிரதமர் மோடி கூறினார்.
2014-க்கு முன்பு காங்கிரஸ் அரசு ஏழைகளை காயப்படுத்த எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை என்று மோடி குற்றம் சாட்டினார். “காங்கிரஸ் அரசு ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்தது. ஒரு ஏழைக் குடும்பத்தின் துயரம் காங்கிரசில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று அவர் கூறினார். மேலும், “ஒரு ஏழையின் அரசாங்கம்” தனது தலைமையின் கீழ் நாட்டில் உருவாக்கப்பட்டது என்று கூறினார்.
17,000 கோடி செலவில் புறநகர் பகுதியில் ரிங் ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டம், மைசூருக்கான இணைப்பை மேலும் எளிதாக்கும் என்று கூறினார்.
புதிய விரைவுச் சாலையானது, பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் கேரளாவின் சுல்தான் பத்தேரி வழியாக தமிழகத்தின் கோயம்புத்தூருடன் இணைக்கப்படும். பெங்களூரு-சென்னை விரைவுச்சாலையில், நெடுஞ்சாலையின் இரண்டு பகுதிகளுக்கு பூமிபூஜை முடிந்துவிட்டதாக கூறினார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்தப் பாதையும், சூரத் வரையிலான முழு விரைவுச் சாலையும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். மாண்டியா நிகழ்ச்சிக்கு முன், மோடி ரோட் ஷோவில் பங்கேற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“