பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் உள்ள துவாரகாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டார்.
அப்போது, “இந்தியக் கூட்டணிக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பது நாடு உறுதியாகிவிட்டது, ஆனால் பாஜகவுக்கு வாக்களிப்பது பாரதத்தின் கனவை வலுவாக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய மோடி, “இன்று காங்கிரஸின் ஷேஜாதா ஒரு முக்கிய உண்மையை ஏற்றுக்கொண்டார். அவருடைய பாட்டி, அப்பா, அம்மா காலத்தில் உருவான அமைப்பு, பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரானது. காங்கிரஸின் கொள்கைகள் பல தலைமுறைகளை அழித்துவிட்டது” என்றார்.
மேலும், “இந்த கான் மார்க்கெட் கும்பல் மோடி ஏதாவது இஸ்லாமியர்களை பற்றி பேசினால், வகுப்புவாதம் என்கின்றனர்.
நான் அவர்களை அம்பலப்படுத்தும்போது, அவர்களின் கிளைகள் அஞ்சுகின்றன. நான் இந்த நாட்டைப் பற்றி கவலைப்படுகிறேன். பிரிவினைக்கு முந்தைய அதே அரசியலில் காங்கிரஸ உள்ளது” என்றார்.
இதையடுத்து கடந்த 5 கட்ட வாக்குப்பதிவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதியாகி விட்டது” என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Congress' policies destroyed many generations of such communities, says PM Modi
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“