மும்பை தாக்குதலையோ அதை நடத்தியவர்களையோ இந்தியா ஒருபோதும் மறக்காது என்றும்,இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என பிரதமர் மோடி தேசத்திற்கு உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடி பேச்சு:
2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் உட்பட முக்கியமான இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலான ’26/11 மும்பை தாக்குதல்’ நடந்து நேற்றுடன் (26.11.18) 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.
3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற மும்பை தாக்குதல் சம்பவத்தால், இந்தியாவின் ஒவ்வொரு நிமிடமும் பதற்றத்துடனேயே கழிந்தன. இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள், பொதுமக்களுக்கு ஆண்டுந்தோறும் உரிய மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நேற்றைய தினம் இவர்களுக்காக சிறப்பு மரியாதை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியது. அதுக்குறித்த விரிவான தகவல் இதோ நம் ஒற்றுமையை குலைக்க தீவிரவாதம் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள ராஜஸ்தானின் பில்வாரா நகரில், பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மும்பை தாக்குதல் குறித்தும் ஆவேசமாக பேசினார்.
மோடி பேசியதாவது, “ மும்பை தாக்குதலையோ அதை நடத்தியவர்களையோ இந்தியா ஒருபோதும் மறக்காது. இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.
நாங்கள் அதற்கான வாய்ப்புக்கு காத்திருக்கிறோம்.சட்டம் அதனுடைய கடமையை செய்யும்” என்று கூறியுள்ளார்.