மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பதிலளித்துப் பேசினார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பேசிய பிரதமர் மோடி, “2004-2014 வரையிலான ஆட்சிக் காலம் ஊழல்கள் மற்றும் வன்முறைகளின் பத்தாண்டுகள் என்றும் 2004-2014 வரை ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றியதுதான் யு.பி.ஏ அரசாங்கத்தின் அடையாளம்” என்று கூறினார். மேலும், “2004-14 கடந்த இந்த பத்தாண்டுகள் இந்தியாவின் தசாப்தம் என்று அறியப்படும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் நம்பிக்கை உள்ளது. ஆனால், சிலர் தங்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்ததால் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர் என்று மோடி கூறினார்.
மேலும், இந்தியாவில் இப்போது நிலையான மற்றும் தீர்க்கமான அரசாங்கம் இருப்பதாகவும், சீர்திருத்தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அவை கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் அல்லது தொலைக்காட்சிகளின் செய்திகளால் அல்ல. ஆனால், எனது பல ஆண்டுகால அர்ப்பணிப்பால் நம்பிக்கை வைத்துள்ளார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார். இருப்பினும், அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த போதிலும், அதானி விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதை பிரதமர் மோடி தவிர்த்துவிட்டார்.
பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நமக்கு வழியைக் காட்டியுள்ளார் என்றும் அவர் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்றும் கூறினார்.
மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மக்கள் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைப்பது நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் அல்லது டிவி செய்திகளால் அல்ல. எனது பல ஆண்டுகால அர்ப்பணிப்பால் நம்பிக்கை வைத்துள்ளார்கள்” என்று கூறினார்.
“நெருக்கடியான நிலையில், உங்கள் முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களா?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனது பாதுகாப்புக் கவசம், உங்கள் தவறான குற்றச்சாட்டுகளால் அதை உடைக்க முடியாது” என்று பிரதமர் மோடி கூறினார்.
எதிர்க்கட்சிகளைத் தாக்கிப் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் இந்தியா பலவீனமடைந்துள்ளதாகவும், இந்தியா மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டுவது முரண்பாடாக உள்ளதாகக் கூறினார்.
எதிர்க்கட்சிகள் கடந்த ஒன்பது ஆண்டுகளை குற்றச்சாட்டுகளைச் வைப்பதில் வீணடித்துவிட்டன. இந்த காலகட்டத்தில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நிர்பந்தம் காரணமாக வைக்கப்படும் விமர்சனமாக மாறியது என்றும் பிரதமர் மோடி கூறினர்.
“அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“