Advertisment

ராம் மோகன் நாயுடு, சந்திர சேகர்: தெலுங்கு தேசம் கட்சியின் 2 எம்.பி.க்கு அமைச்சர் பதவி

பல தசாப்தங்களாக தெலுங்கு தேசம் கட்சிக்காக பணியாற்றிய குடும்பத்தில் இருந்து வந்த டாக்டர் சந்திரசேகர், முதல் முறையாக ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் கிலாரி வெங்கட ரோசய்யாவை எதிர்த்து 3.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tdb cabinet ministers

ஸ்ரீகாகுலாவிலிருந்து மூன்று முறை எம்.பி., கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு மற்றும் குண்டூர் எம்.பி டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஞாயிற்றுக்கிழமை மாலை தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் இருவர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

Advertisment

ஸ்ரீகாகுலாவில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக தேர்வான கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு (36), கேபினட் அமைச்சராகவும், முதல் முறை எம்.பி.யான டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி (48) இணை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சர்கள் குழு பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

மாநிலத்தின் இளம் எம்.பி.க்களில் ஒருவரான ராம் மோகன் நாயுடு, வடக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுலாவில் ஒய்எஸ்ஆர்சிபி கட்யின் திலக் பெரடாவை 3.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.

எம்பிஏ பட்டதாரியான ராம், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும், மக்களவையில் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்.பி ஆன அவரது தந்தை மறைந்த கே யர்ரான் நாயுடு, 1996 மற்றும் 1998 க்கு இடையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக இருந்தார். அவரது மாமா கே அட்சேன்நாயுடு தெக்கலி எம்எல்ஏவாகவும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.

பல தசாப்தங்களாக தெலுங்கு தேசம் கட்சிக்காக பணியாற்றிய குடும்பத்தில் இருந்து வந்த டாக்டர் சந்திரசேகர், முதல் முறையாக ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் கிலாரி வெங்கட ரோசய்யாவை எதிர்த்து 3.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

48 வயதான வெளிநாடு வாழ் இந்திய மருத்துவரான இவர் பணக்கார வேட்பாளர்களில் ஒருவர், அவருடைய குடும்பம் ரூ. 5,785 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளது.

1999 ஆம் ஆண்டு டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சந்திர சேகர் 2005 ஆம் ஆண்டில் அமெரிக்கா பென்சில்வேனியாவில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் உள் மருத்துவத்தில் எம்.டி. ஆக பணியில் சேர்ந்தார்.

தெனாலியின் புரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்து வருவதால் இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டனர்.

முதலமைச்சராக நியமிக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு அபிவிருத்தி செய்ய விரும்பும் தலைநகரான அமராவதி, டாக்டர் சேகரின் குண்டூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

Read in English: TDP’s Kinjarapu Ram Mohan Naidu set to get Cabinet berth, Chandra Sekhar Pemmasani to be MoS

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment