தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த மாதம் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (டிச.3) எண்ணிப்பட்டன.
இதில் பாரதிய ஜனதா மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதேநேரம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் முடிவுகள், இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் உறுதியாக இருப்பதைக் காட்டுகின்றன.
இந்த மாநிலங்களின் மக்களின் உறுதியான ஆதரவிற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்களின் நல்வாழ்வுக்காக அயராது உழைப்போம் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உழைக்கும் கட்சி காரியகர்த்தாக்களுக்கு சிறப்பு நன்றி. அவை ஒவ்வொன்றும் முன்மாதிரி! அவர்கள் அயராது உழைத்து நமது வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை மக்கள் மத்தியில் எடுத்துரைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“