ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ரஷ்யாவின் சோச்சி நகருக்கு இன்று செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ரஷ்யாவின் அதிபராக புடின் மீண்டும் தேர்வாகியுள்ளதை அடுத்து இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பு தொடர்பாகத் பதிவுகளை தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி பகிர்ந்து வருகிறார்.
,
முன்திட்டமிடாத இந்தச் சந்திப்பின் போது, இரு தலைவர்களும் குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, ஈரான் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், தற்போது உலகம் முழுவதும் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான், சிரியாவின் அரசியல் நிலவரம், வரவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மேலும், ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை இந்தியா வாங்கவிருக்கும் நிலையில், அதில் அமெரிக்காவின் தலையீடு குறித்தும் புதினிடம் மோடி பேச இருக்கிறார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் எனப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
,