பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக வரும் மே 11-ம் தேதி நேபாளம் செல்கிறார். இரண்டு நாள் பயணமாக அவர் செல்கிறார்.
நேபாள் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஓலியை சந்திக்கிறார். பின்னர் நாட்டின் பல்வேறு முக்கியப் விஷயங்களில் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இருநாட்டுப் பிரதமர்களின் முன்னிலையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேபாள பிரதமராக பதவியேற்ற காட்கா பிரசாத் சர்மா ஓலி, இந்தியா வந்தார். அப்போது இரு பிரதமரிடையும் பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, வரும் 11ம் தேதி நேபாளம் செல்லும் மோடி 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 900 மெகா வாட் மின் உற்பத்திக்கான அனல்மின் நிலைய அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் பீஹாரின் ராக்ஸ், நேபாளின் காத்மாண்டு இடையே ரயில் போக்குவரத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.