ஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான்! வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.

மோடி மற்றும் கானின் மனநிலை கடுமையாக கோபத்தில் இருந்ததை இந்த சம்பவங்கள்

modi vs imran khan,
modi vs imran khan,

Shubhajit Roy :

modi vs imran khan : கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, கிர்கிஸ்தான் அதிபர் வியாழக்கிழமை இரவு விருந்தளித்தார். அப்போது, பரஸ்பரம் தலைவர்கள் கைகுலுக்கி பேசிக் கொண்டனர்.

2 நாட்களாக நடைப்பெற்ற இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருவரும் 9 மணி நேரம் ஒரே அறையில் அமர்ந்திருந்தனர். இருவரும் நேருக்கும் நேருக்கு அமர்ந்திருந்தாலும் இருவருக்குமான பேச்சு வார்த்தை என்பது வெறும் சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி வியாக்கிழமை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது தீவிரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை பாகிஸ்தான் கைவிடாதவரை, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார் மோடி.

எனினும் மாநாடு நடைப்பெற்ற அரங்கில் மோடியும், இம்ரான் கானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இந்தச் சந்திப்பு நடைபெற்றதை, அதிகாரிகள் வட்டம் உறுதி செய்துள்ளது. ஆனால் இருவருக்கும் இடையே நடைப்பெற்ற பேச்சு வார்த்தை குறித்த எந்த தகவலும் இல்லை.

மாநாட்டின் முதல் நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பதை தவிர்த்த பிரதமர் மோடி, இரண்டாவது நாளான நேற்று, தலைவர்கள் சந்திப்பின்போது, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை இந்திய ஊடகமும் உறுதி செய்துள்ளது. இதுக் குறித்து தெரிவித்திருப்பதாவது, “மரியாதை நிமித்தமாக இருநாட்டு தலைவர்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் எந்தவித சந்திப்பும் நடைபெறவில்லை” என உறுதிப்பட தெரிவித்துள்ளது.

அதே போல் மோடி வியாழக்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தபோது, பாகிஸ்தானுடன் சமாதானத்தைத் தொடங்க தான் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அவரது முயற்சிகள் “தடம் புரண்டன” என்றும் கூறி இருக்கிறார்.

தற்செயலாக, மோடி மத்திய பிஷ்கெக்கில் உள்ள ஓரியன் ஹோட்டலில் தங்கியிருந்தபோது,இம்ரான் கான் உட்பட மற்ற அனைத்து எஸ்சிஓ தலைவர்களும் கிர்கிஸ் ஜனாதிபதி சூரோன்பே ஜீன்பெகோவின் ஜனாதிபதி மாளிகையில் தங்கினர். மோடியும் இம்ரான் கானும் தந்திருந்த இடம் குறைந்தது 30 கி.மீ தூரம் கொண்டது.

அதே போல் வியாழக்கிழமை இரவு கிர்கிஸ்தான் அதிபர் அளித்த விருந்தில் மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த 8 நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் கைகுலுக்கி பேசிக் கொண்டனர். ஆனால், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக விளங்கும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை பிரதமர் மோடி தவிர்த்துள்ளார்.

ஏன், வெள்ளிக்கிழமை காலையில் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் ஃபோட்டோவிலும் 4 நாட்டு தலைவர்கள் மோடி மற்றும் இம்ரான் கானுக்கு இடையில் நின்றுக் கொண்டிருந்தனர். 21 டிகிரி செல்சியல் குளிர் வீசிய பிஷ்கெக் நகரில் மோடி மற்றும் கானின் மனநிலை கடுமையாக கோபத்தில் இருந்ததை இந்த சம்பவங்கள் உணர்த்துக்கின்றன.

ஆனால் 2 வருடங்களுக்கு முன்பு இந்த சூழ்நிலை இப்படி இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன், எஸ்சிஓ உச்சிமாநாட்டின் போது அஸ்தானாவில் உள்ள ஓபரா ஹவுஸில் உள்ள தலைவர்களின் ஓய்வறையில் மோடியும் நவாஸும் சந்தித்துக் கொண்டன. அந்த சந்திப்பின் போது இவை அனைத்தும் முற்றிலும் வேறுப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருடன் மோடி

அங்கு, அவர்கள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், ஷெரீப்பின் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்த முதல் சந்தர்ப்பம் என்பதால், மோடி ஷெரீப்பின் உடல்நலம், அவரது தாய் மற்றும் குடும்பத்தைப் பற்றி கேட்டார்.

இந்த மாநாட்டில் பேசி மோடி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே தீவிரவாத செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது அந்த அரங்கில் இம்ரான் கானும் அமர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கிர்கிஸ்தான் அதிபருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதத்தை ஒழிப்பதில் இருவரும் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

தீவிரவாதத்தை எந்த சூழலிலும் ஏற்க முடியாது என்பதை உலகத்துக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். 2021-ம் ஆண்டை இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே கலாச்சார மற்றும் நட்புறவு ஆண்டாக கொண்டாட உள்ளதாக மோடி அறிவித்தார்.

கிர்கிஸ்தானில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்தார்.இந்திய-கிர்கிஸ்தான் வர்த்தக அமைப்பை இரு தலைவர்களும் கூட்டாக திறந்துவைத்தனர். இந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்புகள் இருப்பதால், முதலீடு செய்ய வருமாறு கிர்கிஸ்தான் தொழிலதிபர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு கிர்கிஸ்தானிலிருந்து டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Modi vs imran khan sco summit in bishkek high lights

Next Story
மும்மொழிக் கொள்கை, ஆங்கில பரவலாக்கம், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து என்ன சொல்கிறார் கஸ்தூரிரங்கன்?National Education Policy committee chairperson Kasturirangan Interview
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com