காங்கிரஸ் கட்சியால் மோடி மேலும் பலம் பெறுவார்; மம்தா பானர்ஜி

Modi will become more powerful because of Congress: Mamata Banerjee in Goa: மோடி சக்திவாய்ந்தவராக மாறி வருவதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம்; மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தனது கோவா பயணத்தின் இறுதி நாளான சனிக்கிழமை மோடி சக்திவாய்ந்தவராக மாறி வருவதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என காங்கிரஸைத் தாக்கி பேசியுள்ளார்.

கோவாவில் பேசிய மம்தா பானர்ஜி, “காங்கிரஸால் மோடிஜி மேலும் சக்திவாய்ந்தவராக மாறுவார். காங்கிரஸின் உறுதியற்ற போக்கால் நாடு ஏன் பாதிக்கப்பட வேண்டும்? தங்களை நிரூபிக்க அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் இருந்தன. பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடாமல், என் மாநிலத்தில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டனர். அவர்கள் உங்களை எதிர்த்துப் போட்டியிடும்போது, நீங்கள் பூக்கள் மற்றும் இனிப்புகளுடன் அவர்களிடம் செல்வீர்கள் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள்? பிராந்தியக் கட்சிகள் வலுப்பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்… மாநிலம் வலுவாக இருந்தால் மத்திய அரசு பலமாக இருக்கும். கோவாவை வெல்ல முடிந்தால் இந்தியாவை வெல்ல முடியும் என்று கூறினார்.

பாஜகவை எதிர்த்துப் போராட உறுதிபூண்டுள்ள மாநிலக் கட்சிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று மம்தா கேட்டுக் கொண்டார். பிஜேபி கூட்டணியில் இருந்து விலகிய கோவா ஃபார்வர்ட் பார்ட்டியின் (ஜிஎஃப்பி) தலைவர் விஜய் சர்தேசாயை சந்தித்த பின்னர் மம்தா இவ்வாறு கூறினார்.

“நாங்கள் வலுவான கூட்டாட்சி கட்டமைப்பைக் காண விரும்புகிறோம். வெளியாட்களின் கொடுமைப்படுத்துதல்கள் எங்களுக்கு வேண்டாம். பாஜகவை தோற்கடிப்பதில் உறுதியாக உள்ள மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று டோனா பவுலாவில் உள்ள சர்வதேச மையத்தில் மம்தா பானர்ஜி கூறினார்.

முன்னதாக, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கோவா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியது. கோவாவில் டிஎம்சியின் தேர்தல் பிரச்சாரத்தை நிர்வகித்து வரும் அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோருக்கும், ஜிஎஃப்பி சர்தேசாய்க்கும் இடையே முன்னதாக சந்திப்புகள் நடைபெற்ற நிலையில், சர்தேசாய் டிஎம்சியுடன் இணைய விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று சர்தேசாய் உடனான சந்திப்புக்குப் பிறகு, மம்தா பானர்ஜி, “நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம். ஒன்றாக வேலை செய்வோம். ஆனால் கூட்டணி அல்லது இணைப்பு அவர்களின் விருப்பம், அதை அவர்கள் முடிவு செய்கிறார்கள். மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு பாஜகவுக்கு நல்லதொரு போட்டியை கொடுக்க முடியும்” என்றார்.

கோவாவில் ஆம் ஆத்மி கட்சியுடன் (ஏஏபி) திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைகோர்க்க முடியுமா என்று கேட்டதற்கு, “நான் அவரை (கெஜ்ரிவால்) நேசிக்கிறேன். அவர்களால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. டெல்லியில் அன்னா ஹசாரேவால் வெற்றி பெற்றனர். நீங்கள் அதை பாராட்ட வேண்டும்… நான் அவர்களை பஞ்சாப் செல்வதை தடுத்திருக்கிறேனா? ஏன் எங்களை கோவா வரவிடாமல் தடுக்கிறார்கள். மற்ற கட்சிகளின் சார்பாக என்னால் பேச முடியாது, ஆனால் பாஜகவை எதிர்த்துப் போராட விரும்பும் எனது சொந்தக் கட்சி மற்றும் பிற மாநிலக் கட்சிகளின் கருத்துக்களை முன்வைக்க முடியும். என்று மம்தா பானர்ஜி கூறினார்.

கோவா ஒரு தங்க சுரங்கம் ஆனால் அதற்கு வலுவான தலைமை தேவை என்று மம்தா கூறினார். மீன்பிடித்தல், போக்குவரத்து மற்றும் சுரங்கத் துறைகளில் கோவாவில் வேலையின்மை பிரச்சினைகள் உள்ளன. கோவாவில் இன்று எல்லாம் உள்ளது, அதில் தலைமை, திட்டச் செயல்முறை மற்றும் அமைப்பு மட்டுமே இல்லை.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த பிறகு சர்தேசாய், “மம்தா பானர்ஜி பிராந்தியப் பெருமையின் சின்னம், நாங்களும் ஒரு பிராந்தியக் கட்சி. அனைவரும் ஒன்றுபட வேண்டும். மூன்றில் ஒருவர் பாஜகவுக்கு வாக்களிப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இரண்டு இல்லை என்று அர்த்தம். அந்த இருவரையும் ஒன்றிணைப்பதே எங்கள் முயற்சியாக இருக்கும். என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Modi will become more powerful because of congress mamata banerjee in goa

Next Story
இந்தியர்கள் இனவெறியர்களா? உண்மை என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com