Modi - Xi Jinping Conversation Top quotes: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முறைசாரா உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, “சென்னை” மூலம் சீனா - இந்தியா உறவுகளில் ஒத்துழைப்பின் புதிய சகாப்தம் தொடங்கும் என்றும் கூறினார். மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் விவேகத்துடன் நிர்வகிக்கப்படும் எனவும் அவை சர்ச்சைகளாக மாறாது என்றும் பிரதமர் மோடி கோவளத்தில் இன்று தாஜ் ஃபிஷர்மேனில் நடைபெற்ற தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தையின் தெரிவித்தார்.
இதற்கிடையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முறைசாரா உச்சிமாநாட்டை ஒரு “நல்ல யோசனை” என்று அழைத்தார். மேலும், இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடனான உரையாடல் இதயத்திற்கு நெருக்கமானதாக இருப்பதாகவும் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/top-3-2-300x200.jpg)
இந்தியாவும் சீனாவும் என்ன விவாதித்தார்கள்:
பிரதமர் மோடி: “இன்றைய சென்னை பார்வைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு புதிய ஆரம்பம் செய்யப்படும். வுஹான் சக்தி எங்கள் உறவுகளுக்கு புதிய வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.”
பிரதமர் மோடி: “கடந்த ஆண்டு வுஹான் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, இருதரப்பு உறவுகளில் அதிக ஸ்திரத்தன்மையும் புதிய வேகமும் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே மூலோபாய தொடர்பு அதிகரித்துள்ளது.”
பிரதமர் மோடி: “நாங்கள் எங்கள் வேறுபாடுகளை விவேகத்துடன் நிர்வகிக்க முடிவு செய்துள்ளோம். மேலும், நாங்கள் அவற்றை மோதல்களாக மாற அனுமதிக்க மாட்டோம். எங்கள் கவலைகள் குறித்து நாங்கள் நுண்ணுணர்வு கொண்டிருப்போம். எங்களுடைய உறவு உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும்.”
பிரதமர் மோடி: “வுஹான் உச்சி மாநாடு எங்கள் உறவுகளில் ஒரு புதிய வேகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இன்றைய ‘சென்னை பார்வை’ இந்தியா - சீனா உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.”
சீன அதிபர் ஜி ஜின்பிங்: “இருதரப்பு உறவுகள் தொடர்பாக நாங்கள் இயத்தோடு இதயம் விவாதித்துள்ளோம். நாங்கள் உண்மையில் ஆழ்ந்த ஈடுபாடுகளையும் நல்ல விவாதங்களையும் மேற்கொண்டோம்.”
ஜி ஜின்பிங்: “கடந்த ஒரு ஆண்டாக முறைசாரா உச்சி மாநாடு தொடர்ந்து ஸ்தூலமான முன்னேற்றத்தைத் அளித்துவருகிறது.”
ஜி ஜின்பிங்: “நமக்கு ஆழமான ராஜதந்திர தொடர்பும், மிகவும் பயனுள்ள நடைமுறை ரீதியான ஒத்துழைப்பு உள்ளது.”
ஜி ஜின்பிங்: “நாம் அதிக அளவில் பன்முகத்தன்மைகொண்ட மக்களையும் கலாச்சார பரிமாற்றங்களையும் கொண்டுள்ளோம். பல சந்தர்ப்பங்களில் நெருக்கமான ஒத்துழைப்பையும் கொண்டுள்ளோம்.”
ஜி ஜின்பிங்: “இந்த வைகையான முறைசாரா உச்சிமாநாட்டில் நாங்கள் சரியான முடிவை எடுத்துள்ளோம் என்பதை நடந்தவைகள் நிரூபித்துள்ளன. இந்த மாதிரியான சந்திப்பை நாங்கள் தொடருவோம்” என்று கூறினார்.
பின்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியிடம் கூறுகையில், “உண்மையில் இந்த முயற்சி பிரதமர் மோடி நீங்கள்தான் முவைத்தீர்கள். நான் ஒப்புக்கொள்கிறேன். இது ஒரு நல்ல யோசனை” என்று கூறினார்.