ஜின்பிங்-மோடி சந்திப்பு : உறுதி செய்யாத சீனா, அறிவிப்பு எப்போது?

சீன அதிபர் வருகைக்கு இன்னும் சில நாட்களே இருந்தாலும், பெய்ஜிங் தரப்பிலிருந்து  இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியிடப்படாமாலே உள்ளன

Modi, Xi Jinping, India, China, informal summit, Mahabalipuram, Modi - Xi Jinping meet in Mahabalipuram,PM Modi - China President Xi Jinping, India - China summit in Mahabalipuram,மோடி, ஜீ ஜின்பிங், மகாபலிபுரம், பாதுகாப்பு தீவிரம், official confirmation on xi chenai visit
Modi, Xi Jinping, India, China, informal summit, Mahabalipuram, Modi – Xi Jinping meet in Mahabalipuram,PM Modi – China President Xi Jinping, India – China summit in Mahabalipuram,மோடி, ஜீ ஜின்பிங், மகாபலிபுரம், பாதுகாப்பு தீவிரம், official confirmation on xi chenai visit

மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கும் உச்சிமாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்தியா வருகைக்கு இன்னும் சில நாட்களே இருந்தாலும், அது குறித்து பெய்ஜிங் தரப்பிலிருந்து  இன்னும்  எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியிடப்படாமல் உள்ளது. இரு தலைவர்களும் வரும் அக்டோபர் 11-12 தேதிகளில் சந்திப்பார்கள் என்ற  நோக்கத்தில் மாமல்லபுரத்தில் பயங்கர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது தமிழக அரசு.

இதுபோன்று,அரசுமுறைப் பயணத்தை தாமதமாக அறிவிப்பது ஒன்றும் புதிதில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக , 2018 ஆம் ஆண்டில், மோடிக்கும் ஷிக்கும் இடையிலான ஏப்ரல் 27 மற்றும் 28  வுஹான் உச்சிமாநாட்டின் அறிவிப்பை, ஏப்ரல் 22 ஆம் தேதி தான் அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

எனவே, சீன அதிபர் வருகை தொடர்பான அறிவிப்பு அடுத்த 24 முதல் 48 மணிநேரங்களில் வெளியடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன் ஒருவருக்கொருவர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை  ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜி ஜின்பிங் தனது இந்திய பயணத்திற்குப் பிறகு காத்மாண்டுவை பார்வையிடலாம் என்று நேபாள ஊடகங்களில் தற்போதே செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை ( அக்டோபர் 8) முதல் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் தகவலும் பெய்ஜிங்கிலிருந்து வருகிறது. எனவே, அதிகாரப் பூர்வமான தகவல் வரும்வரை பொருத்திருக்கவேண்டும்.

இருந்தாலும், கடந்த சனிக்கிழமையன்று காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் ,கூறிய கருத்துக்கள் இந்தியாவிற்கு சற்று தயக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். யாவ் ஜிங் கூறுகையில், “காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கும் , காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள்யும், நீதியையும் நிலை நாட்ட சீனா பணியாற்றும்”  என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு , இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. “காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் உள்ள இருநாட்டு பிரச்சனையில் சீனா கலந்து கொள்ளாமல் ஒதுங்கும் பழக்கத்தை மீறக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியின் எதிர்ப்பு குறித்து பெய்ஜிங்கில் இருந்து உத்தியோகபூர்வ பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும்,  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’  பத்திரிக்கையில் சீன  வட்டாரங்கள் சிலர் தெரிவிக்கையில் , “சீனாவின் நிலைப்பாடு என்றுமே சீரானது , அது எப்போதும் பிராந்தியத்தில் அமைதியை மட்டும் விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஐ.நா பொதுச் சபையில், மோடியும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானும் பேசிய அதே நாளில் சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி,  காஷ்மீர் பிரச்சனயை எழுப்பியது குறிப்பிடத்தக்கது

இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கர், சீனா அதிபர் வருகையை குறித்து பத்திரிக்கையாளர்களிடம் “நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்பதோடு தனது பதிலையும் முடித்திருக்கின்றார்.

எனவே, இரு நாடுகளுக்கும் அடுத்த 48 மணி நேரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Modi xi summit in chennai mahabalipuram official confirmation on xi chennai visit china mahabalipuram announcement

Next Story
போராட்டத்தில் ஈடுபட்ட 47 ஆயிரம் நபர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள்… கே.சி.ஆர் அதிரடி!Telangana transport strike
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com