மாமல்லபுரம் பீச் வாக்கிங்கின் போது, தனது கையில் அக்குபிரஷர் ரோலர் வைத்திருந்ததாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய - சீனா நாடுகளின் தலைவர்களின் முறைசாரா சந்திப்பு மாநாடு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 11மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற்றது.முதல்நாள் நிகழ்ச்சிக்கு பிறகு, 12ம் தேதி காலைநேரத்தில் பிரதமர் மோடி தான் தங்கியிருந்த ரெசார்ட் அருகே உள்ள பீச் பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு கிடந்த குப்பைகளை அகறறினார். பிரதமர் மோடி, குப்பைகளை அகற்றிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
30 நிமிடங்கள், மோடி கடற்கரை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு கண்ட குப்பைகளை தானே பொறுக்கி அந்த இடத்தை சுத்தப்படுத்தியதோடு மட்டுமல்லாது, சுத்தம் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தினார். இதுதொடர்பாக, 3 நிமிடங்கள் கால அளவிலான வீடியோவை, அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோவுக்கு, பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். கவுன்சிலர் கூட செய்ய தயங்கும் வேலையை, நாட்டின் பிரதமர் தயங்காமல் செய்துவிட்டதாக பலரும் பாராட்டினர்.
இந்த வீடியோவில், மோடியின் கையில் ஓரு உபகரணம் இருப்பதை கண்ட பலர், அது என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தனர். பலர் இதற்கு பல்வேறுவிதமான பதில்களை தெரிவித்திருந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி, டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
Since yesterday, many of you have been asking - what is it that I was carrying in my hands when I went plogging at a beach in Mamallapuram.
It is an acupressure roller that I often use. I have found it to be very helpful. pic.twitter.com/NdL3rR7Bna— Narendra Modi (@narendramodi) October 13, 2019
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, Plogging (ஜாக்கிங்கின் போது குப்பைகளை பொறுக்கி எடுத்தல் ) நிகழ்வின் போது என் கையில் இருப்பது என்ன என்று பலர் கேள்வி எழுப்பியிருந்தனர். அது அக்குபிரஷர் ரோலர். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக பிரதமர் மோடி, அந்த டுவீட்டில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.