Advertisment

உக்ரைன் குறித்து ஜெலன்ஸ்கியுடன் விவாதித்த மோடி - 35 நிமிட உரையாடலில் பேசியது என்ன?

நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கித்தவிக்கும் சுமி பகுதியில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற உக்ரைன் அரசின் ஆதரவை மோடி கோரினார்.

author-image
WebDesk
Mar 07, 2022 16:10 IST
உக்ரைன் குறித்து ஜெலன்ஸ்கியுடன் விவாதித்த மோடி - 35 நிமிட உரையாடலில் பேசியது என்ன?

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, 12 ஆவது நாளாக நீடித்து வருகிறது. சில நகரங்களில் மட்டும், மக்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று( திங்கள்கிழமை) காலை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, இருநாட்டு தலைவர்களும், உக்ரைனில் நிலை குறித்து விவாதித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவரும் சுமார் 35 நிமிடம் பேசியதாக வட்டாரங்கள் கூறுகின்றன. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடர்ந்து நேரடி உரையாடல் நடந்து வருவதை மோடி பாராட்டினார். தொடர்ந்து, உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற உதவிய உக்ரைன் அரசுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

மேலும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கித்தவிக்கும் சுமி பகுதியில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற உக்ரைன் அரசின் ஆதரவை மோடி கோரினார். ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு ஜெலன்ஸ்கியுடன் மோடியின் இரண்டாவது தொலைப்பேசி அழைப்பு இதுவாகும்.

பிப்ரவரி 24 முதல் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. பல முக்கிய நகரங்களை கைப்பற்ற அப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை காலை, பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற பல நகரங்களில் மனிதாபிமான வழிதடத்தை உருவாக்க ரஷ்யா போர்நிறுத்தத்தை அறிவித்தது.

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களை இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேபோல், போரில் இருந்து தப்பிக்க மற்ற நாட்டவருடன் இணைந்து இந்தியர்களும் ருமேனியா, போலந்து மற்றும் மால்டோவா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.

கங்கா நடவடிக்கையின் கீழ், சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை திருப்பி அனுப்புவதற்கு அரசாங்கம் சிவில் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், உக்ரைன் போர் நிலைமை குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். மேலும், உக்ரைன் அதிபர் செலன்கியிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துமாறு புதினுக்கு கோரிக்கைவைத்தார்.இவர்களது தொலைப்பேசி அழைப்பு 50 நிமிடம் நீடித்தகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Modi #Russia #Ukraine #Vladimir Putin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment