Advertisment

நாட்டிற்காக 30 வருடங்கள் சேவை புரிந்தேன்... இன்றோ வெளிநாட்டு கைதி போல நடத்தப்படுகின்றேன்! - வருந்தும் முன்னாள் ராணுவ வீரர்

என்னுடைய ஓய்வுக்குப் பிறகும் நான் என் மாநிலத்திற்காகவும் நாட்டிற்காகவும் பணியாற்ற விரும்பினேன். அதனால் தான் காவல்துறையில் இணைந்தேன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mohammed sananullah and his wife Samina Begum

mohammed sananullah and his wife Samina Begum

 Abhishek Saha

Advertisment

Mohammad sananullah : நான் ராணுவத்தில் பணி புரிந்திருக்கின்றேன். மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர், ஆந்திரா, அசாம், மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். 30 வருடங்களாக இந்த நாட்டிற்காக நான் வீரத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். நான் ஒரு இந்தியன். எனக்கான நீதி எனக்கு கிடைக்கும் என்று கூறுகிறார் இந்தியா ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர் முகமது சனனுல்லா.

சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவில் குடியேறிய வெளிநாட்டினர் என்று கூறி அவரை காவலில் எடுத்தது அசாம் காவல்துறை. தற்போது பெயிலில் வெளியே வந்துள்ள சனனுல்லாவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்த நேர்காணலின் தொகுப்பு இது.  கௌஹாத்தியில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் நாங்கள் அவரை சந்தித்து பேசினோம்.

மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட இந்திய ராணுவத்தின் முன்னாள் ராணுவ வீரர் (subedar) ஜூன் மாதம் 8ம் தேதி வெளியே வந்தார். அது குறித்து அவர் கூறும் போது “நான் ஜெயிலுக்குள் நுழையும் போது கதறிக் கதறி அழுதேன். இந்த நாட்டிற்காக நான் 30 வருடங்கள் சேவை செய்துள்ளேன். இப்போது ஒரு வெளிநாட்டுக் கைதி போல நடத்தப்படுகிறேன் என்று கூறுகிறார் சனனுல்லா. இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கும் குப்வாராவில் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையின் முழுமையான ஆங்கில பிரதியைப் படிக்க

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த அவர் தன்னுடைய 52 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். 1987ம் ஆண்டு அவர் ராணுவத்தில் இணைந்தார். 2014ம் ஆண்டு அவருக்கு குடியரசுத் தலைவரின் கையால் பணி உயர்வு விருது வழங்கப்பட்டது. ஜூனியர் கமிஷ்னட் ஆஃபிசரில் இருந்து சாய்ப் சுபேதாருக்கு (Naib Subedar) அவர் மாற்றப்பட்டார். ராணுவத்தில் இருந்து விலகிய பின்பு அவர் அசாம் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பதவி வகித்தார்.

publive-image MD Sanaullah, photographed at his home. Express Photo by Abhishek Saha

2008 - 2009ம் ஆண்டில் சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்குள் வந்த வெளிநாட்டவர் என்று அவர் மீது பார்டர் விங் வழக்கு பதிவு செய்தது. இதனைத் எதிர்த்து போராடிய அவர் மே 23ம் தேதி வழக்கில் தோல்வியுற்றார். 6 நாட்கள் கழித்து அவரை சிறைக்கு அழைத்து சென்றது காவல்துறை.

அசாம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் வந்த அண்டை நாட்டவர்களை அடையாளம் காண தீர்ப்பாயங்கள் இருக்கின்றன. வெளிநாட்டவர் சட்டம் 1946 -ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவது வழக்கம்.

என்னை கைது செய்தவர்கள் எனக்கு முன்பு சீனியராக வேலை பார்த்தவர்கள். அவர்களுடைய கடமையை அவர்கள் நிறைவேற்றுகின்றார்கள். என்னுடைய ஓய்வுக்குப் பிறகும் நான் என் மாநிலத்திற்காகவும் நாட்டிற்காகவும் பணியாற்ற விரும்பினேன். அதனால் தான் காவல்துறையில் இணைந்தேன் என்று கூறுகிறார் முகமது.

6 இடங்களில் அமைந்திருக்கும் சிறைகள்

மே 28ம் தேதி நான் வடக்கு கௌஹாத்தியில் உள்ள டி.எஸ்.பிக்கு அழைப்பு விடுத்தேன். பின்னர் அன்றைய இரவு முழுவதும் தூங்குவதற்கு இடமின்றி அமர்ந்திருந்தேன். கோல்பாராவில் இருக்கும் சிறைக்கு அடுத்த நாள் இரவு 7 மணிக்கு அழைத்து செல்லப்பட்டேன். 40 கைதிகள் இருந்த சிறை அறையில் எனக்கு இடம் அளிக்கப்பட்டது. இரண்டு கம்பளிகள், கொசுவலை, ஒரு தட்டு மற்றும் டம்ளர் ஆகியவற்றை எனக்கு அளித்தனர்.

பெயிலில் வெளியேற 20 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தவும், இரண்டு சூயரிட்டி கையெழுத்துகளும் தேவை என்று கூற அதனை செலுத்திவிட்டு வெளியே வந்துள்ளார் சனனுலா. வெளியே வரும் போது அவருடைய கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் அடையாளங்கள் அவரிடம் இருந்து பெறப்பட்டனர்.

கோல்பாரா, கோக்ரஜ்ஜர், தெஸ்பூர், ஜோர்ஹெத், திப்ருகர், மற்றும் சிலிச்சார் உள்ளிட்ட 6 சிறைகளில் தீர்ப்பாயத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் (சட்டபுறம்பாக இந்தியாவிற்கு வந்தவர்கள்) தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

9 வருடங்களாக சிறையில் வாடும் இளைஞர்கள்

என்னுடன் சிறையில் இருந்தவர்களுடன் பேசிய போது அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கே செல்லாதவர்கள். அவர்களில் சிலர் 8 முதல் 9 வருடங்கள் சிறையில் வாடி வருகின்றனர். நல்பாரி மாவட்டத்தில் இருந்து வந்த ஒருவரின் பெயரில் ஏற்பட்ட சிறு மாற்றங்கள் காரணமாக 9 வருடங்களாக சிறையில் இருக்கின்றார்.

வெளியே வருவதற்காக மேல்முறையீடு செய்ய பலரிடம் பணம் இல்லை என்பதால் தான் இவர்கள் இங்கு கஷ்டப்படுகின்றார்கள். 18 முதல் 30 வயது வரையில் இருக்கும் இளைஞர்கள் நிறைய பேரை நான் அங்கு சந்தித்தேன். அவர்களை வெறுமனே இந்திய நாட்டின் பிரஜைகள் இல்லை என்று அவர்கள் கூறி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களின் நாடு எது என்ற கேள்வியை அவர்கள் கேட்பதே இல்லை. பலர் தங்களின் உறவினர்களை பார்ப்பதையும் கூட நிறுத்திவிட்டனர். கோல்பாரா மற்ற மாவட்டங்களில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் அவர்களால் அதிக அளவு பணம் செலவழித்து வந்து பார்க்க இயலுவதில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றார் முகமது சனனுல்லா.

உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பின் படி 3 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்கள் இரண்டு சுயரிட்டி கையெழுத்துகளுடன் 1 லட்ச ரூபாய் பிணைத் தொகை செலுத்தினால் வெளியே வரலாம். மேலும் சிறையில் இருந்து வெளியேறி அவர்கள் எங்கே தங்க போகின்றார்கள் என்பது தொடர்பான தகவல்கள், பயோமெட்ரிக் டேட்டா ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் வாரத்திற்கு ஒரு முறை தீர்ப்பாயம் கூறிய காவல் நிலையத்திற்கு சென்று ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

அம்மக்கள் வெளியே இருந்தால் கூட தினக்கூலியாக 200 ரூபாய் சம்பாதித்து தங்கள் குடும்பத்துடன் உணவு உண்டு அமைதியாக வாழ்ந்திருப்பார்கள் என்றும் வருத்தம் தெரிவிக்கின்றார் அவர்.

மேலும் படிக்க : 50 வருட திருமண வாழ்க்கையை புத்தகமாக எழுத நினைத்தோம் ! அனைத்தும் வீணாகிவிட்டது.. எவரெஸ்ட்டில் மனைவியை இழந்த கணவர் வேதனை

கௌஹாத்தி உயர் நீதிமன்றம் மத்திய அரசு, அசாம் மாநில அரசு, அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேர்தல் ஆணையம், முன்னாள் அசாம் காவலர் சந்தரமால் தாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  2008-09 காலங்களில் அசாம் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றிய சந்தரமால் தாஸ் தான் சனனுல்லாவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment