2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக உணர்ச்சிகளைத் தூண்டி வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.
நாக்பூரில் உள்ள ரெஷிம்பாக் மைதானத்தில் தசரா பேரணி மற்றும் விஜயதசமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், ’யார் நல்லவர், நல்லது செய்தவர்... யார் சிறந்தவர் என அமைதியான மனதுடன் சிந்தியுங்கள், என்றார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாடகர்-இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினர்களில் ஒருவர். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் செவ்வாய்க் கிழமை அதிகாலை ‘பாத் சஞ்சலன்’ அணிவகுப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்தனர்.
மோகன் பகவத் உரையின் சில சிறப்பம்சங்கள் இங்கே:
ஒவ்வொரு ஆண்டும், உலகில் இந்தியாவின் பெருமை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு சிறப்பு வாய்ந்தது. இந்தியர்களின் விருந்தோம்பல் பாராட்டப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நமது பன்முகத்தன்மையை அனுபவித்தனர். உலக அளவில் இந்தியாவுக்கு ஒரு இடத்தை எங்கள் தலைமை வழங்கியது’.
மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து பேசிய பகவத் ’மணிப்பூரில் மோதலின் இரு தரப்பிலும் உள்ள மக்கள் அமைதியை நாடும் போது, அந்தத் திசையில் ஏதேனும் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படுவதைக் கண்டால் உடனடியாக ஒரு சம்பவத்தை ஏற்படுத்துவதன் மூலம் வெறுப்பையும் வன்முறையையும் தூண்ட முயற்சிக்கும் இந்த சக்திகள் யாவை?"
பல ஆண்டுகளாக, மெய்தி மற்றும் குக்கி சமூகங்கள் ஒன்றாக வாழ்கின்றன. எப்படி திடீரென்று வன்முறை வெடித்தது? மோதல்கள் வெளி சக்திகளுக்கு நன்மை பயக்கும். இதில் வெளிப்புறக் காரணிகள் உள்ளதா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாட்கள் அங்கே இருந்தார். உண்மையில் மோதலை தூண்டியது யார்? மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாடுபட்ட சங்கத் தொழிலாளர்களை நினைத்து பெருமைப்படுவதாக கூறினார்.
கலாச்சார மார்க்சிஸ்டுகள், நாட்டின் கல்வி மற்றும் கலாச்சாரத்தை கெடுக்க ஊடகங்கள் மற்றும் கல்வித்துறையில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்கள் ஊடகங்கள் மற்றும் கல்வித்துறையின் கட்டுப்பாட்டை எடுத்து, கல்வி, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக சூழலை குழப்பம் மற்றும் ஊழலில் மூழ்கடித்துவிடுகிறார்கள்.
இந்தியா முன்னேற வேண்டும் என்று விரும்பாத சிலர் உலகிலும், இந்தியாவிலும் இருக்கிறார்கள்... சமூகத்தில் பிரிவுகளையும் மோதல்களையும் உருவாக்க முயற்சிக்கிறார்கள். சமூகத்தில் கோஷ்டி மற்றும் மோதல்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். நம் விழிப்புணர்வின்மையாலும், நம்பிக்கையின்மையாலும், நாமும் சில சமயம் அதில் சிக்கி, தேவையில்லாத தொல்லைகளை உருவாக்குகிறோம்...
இந்தியா முன்னேறினால், அவர்களால் விளையாட முடியாது; எனவே, அவர்கள் தொடர்ந்து எதிர்க்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பதற்காகவே குறிப்பிட்ட சித்தாந்தங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். நாடு முன்னேறி வருகிறது. ஆனால் முன்னோக்கி செல்லும் போது, நம் உலகைக் காட்ட வேண்டும். நாம் யாருடைய வழியையும் பின்பற்றக் கூடாது. இது எங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கிறது, என்று மோகன் பகவத் பேசினார்.
Read in English: RSS chief Mohan Bhagwat’s Vijayadashami speech: ‘Vote keeping in mind unity, integrity, identity and development of country’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.