Advertisment

ம.பி புதிய முதல்வர் மோகன் யாதவ்: மாநிலத்தின் ஓ.பி.சி முகம், பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வளர்ந்தவர்

உஜ்ஜைன் தெற்கில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாநிலத்தின் முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த இவர், 2021-ல் தேசிய கல்வி கொள்கையின் கீழ் இளங்கலை படிப்புகளில் இந்து இதிகாசங்களின் அடிப்படையில் அத்தியாயங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை நியாயப்படுத்தினார்.

author-image
WebDesk
New Update
MP Mohan.jpg

மத்திய பிரதேசத்தின் போபாலில் நேற்று (திங்கள்கிழமை) மதியம் மாநிலத்தின் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் உடன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபோது, மோகன் யாதவ் மூன்றாவது வரிசையில் நின்றார். சட்டமன்றத் தேர்தலில் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்ததைத் தொடர்ந்து மாநிலத்தின் முதல்வர் போட்டியில், போட்டோவுக்கு முன் வரிசையில், முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஒரு சில முன்னாள் மத்திய அமைச்சர்கள், மற்றும் ஒரு தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் நின்றிருந்தனர்.  

Advertisment

சில நிமிடங்களுக்குப் பிறகு, 58 வயதான ஓ.பி.சி தலைவர் மோகன் யாதவ், மாநிலத்தின் உயர் பதவியைப் பெற்றார். இது பல பாஜக தலைவர்களை திகைக்க வைத்தது. கட்சியின் தலைமையகத்திற்கு வெளியே, சௌஹானுக்காக "மாமா, மாமா" என்றும் "பிரஹலாத் படேல் ஜிந்தாபாத்"  என்று அவரது ஆதரவாளர்களும் கோஷங்கள் எழுப்பிய நிலையில் அனைவரும் அமைதியடைந்தனர். 

யாதவ்,  நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ்  உடன் பயணித்த நிலையில் இதுவே அவரை மூத்த தலைவர்களின் கவனம் பெற்று முதல்வராக தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இவர் உஜ்ஜைன் தெற்கு தொகுதியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

3  குழந்தைகளுக்கு தந்தையான யாதவ், பலதரப்பட்ட கல்விப் பின்னணியைக் கொண்டவர், அவர் பல்வேறு பட்டப்படிப்புகளைப் பெற்றுள்ளார்: BSc, LLB, MA, MBA மற்றும் PhD.

யாதவ் இந்துத்துவா கொள்கை கொண்டவர். இவரும் தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். இப்போது நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலின் போது,  ​​யாதவ் காங்கிரஸ் தலைவர்களிடம் அவர்களின் "அவுகத்" (மதிப்பு) என்ன என்று கேட்டது சர்ச்சையைத் தூண்டியது.  “பொதுமக்கள் உங்களை எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திருப்பி அனுப்புவார்கள். உஜ்ஜயினியில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளில் இடையூறுகளை உருவாக்குகிறீர்கள். உங்கள் தந்தை உங்களுக்கு பால் கொடுத்தாரா? உன் மதிப்பு என்ன?"  என்று உஜ்ஜைன் பொதுக் கூட்டத்தில் பேசினார்.  

முன்னாள் அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மா உட்பட காங்கிரஸ், யாதவ், உஜ்ஜைன் முனிசிபல் கார்ப்பரேஷனில் செல்வாக்கு செலுத்தி நகரின் மாஸ்டர் பிளானை மாற்றியதாகக் குற்றம் சாட்டியது, இதனால் அவரது குடும்பத்தினர் வைத்திருந்த நிலங்கள் ஜூலை 2023 இல் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்பட்டன. எதிர்ப்புக்குப் பிறகு, உஜ்ஜைனி மாவட்ட நிர்வாகம், கிட்டத்தட்ட 150 ஹெக்டேர் நிலத்தை விவசாய நிலத்திற்கு குடிசை நிலமாக மாற்றியது.

அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற யாதவ், 1982 இல் மாதவ் அறிவியல் கல்லூரியின் மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராகத் தொடங்கி, 1984 இல் கல்லூரியின் தலைவராக ஆனபோது, ​​மாணவர் அரசியலில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

யாதவ் உஜ்ஜயினியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியின் செயல்பாட்டாளராக இருந்து 1991-ல் அதன் தேசிய செயலாளராக ஆனார்.

2022 ஆம் ஆண்டில், யாதவ் சீதா தேவியை "அவமதித்ததாக" குற்றம் சாட்டி காங்கிரஸ் அவரைத் தாக்கியது, அவர் தனது வாழ்க்கையை விவாகரத்து பெற்றவரின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தார். “சீதா மாதா தனது கணவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார், அவர் கஷ்டங்களை மறந்து ராமரின் உயிருக்காக பிரார்த்தனை செய்தார். இன்றைய காலகட்டத்தில், இது விவாகரத்துக்குப் பின் வாழ்க்கை போன்றது,” என்று யாதவ் ஒரு பொது நிகழ்ச்சியில் கூறியதாக கூறப்படுகிறது. சீதா பூமிக்கு திரும்புவதை இன்றைய காலகட்டத்தில் தற்கொலை என்று சொல்லலாம் என்றும் அவர் கூறினார்.

யாதவுடன் பணியாற்றிய பாஜக தலைவர் கன்வர் படேல் கூறுகையில்,  மோகன் யாதவின் முழு குடும்பமும் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையது. அவர் தரையோடு இணைந்த தலைவர். ஆனால் அவர் முதல்வராக வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது” என்றார்.

யாதவ் 2000-2003 காலகட்டத்தில் உஜ்ஜயினியில் உள்ள விக்ரம் பல்கலைக்கழகத்தின் பணிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். 2003 சட்டமன்றத் தேர்தலில், அவர் உஜ்ஜைனியில் உள்ள பட்நகர் தொகுதியில் போட்டியிடத் தயாராக இருந்தார், ஆனால் உள்ளூர் பாஜகவினர் கட்சியை மற்றொரு வேட்பாளருக்கு டிக்கெட் கொடுக்க வற்புறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அப்போது பாஜகவின் நகர மாவட்டப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய யாதவுக்கு இது ஒரு சிறு பின்னடைவாக மாறியது. 2004ல் மாநில பாஜக செயற்குழு உறுப்பினரானார்.

2004-2010 இல், யாதவ் உஜ்ஜைன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக மாநில அமைச்சர் பதவியில் பணியாற்றினார். 2008 முதல், பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் மாவட்டத் தலைவராக இருந்து வருகிறார். 2011-2013 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக கேபினட் அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

சவுகான் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த யாதவ், 2021 ஆம் ஆண்டில் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் மாநிலக் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளுக்கு ராம்சரித்மனாஸ், பகவத் கீதை மற்றும் மகாபாரதம் போன்ற இந்து இதிகாசங்களை அடிப்படையாகக் கொண்ட அத்தியாயங்களை அறிமுகப்படுத்தியதை நியாயப்படுத்தினார். நமது புகழ்பெற்ற வரலாற்றை முன்னோக்கி கொண்டு வாருங்கள், அதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்றார்.

ஆங்கிலத்தில் படிக்க:  https://indianexpress.com/article/political-pulse/the-unlikely-cm-mohan-yadav-mp-obc-face-who-rose-through-bjp-rss-ranks-9064292/

யாதவ் மாநில மல்யுத்த சங்கத்தின் தலைவராகவும், மாநில ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். குச்சி சண்டை மற்றும் வாள் வீச்சு ஆகியவற்றிலும் யாதவ் அதிக ஆர்வம் கொண்டவர் ஆவார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment