யானைத்தந்தம் மீட்பு விவகாரம் : மோகன்லால் மீது குற்றச்சாட்டு பதிவு

Mohanlal : மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக, வனத்துறை அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

Mohanlal, ivory case, actor, Perumbavoor, ernakulam, forest department, chargesheet
Mohanlal, ivory case, actor, Perumbavoor, ernakulam, forest department, chargesheet, மோகன்லால், யானை தந்தம். நடிகர் மோகன்லால், குற்றச்சாட்டு, எர்ணாகுளம், வனத்துறை

மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக, வனத்துறை அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

2012ம் ஆண்டில் கேரள மாநிலம் தேவராவில் உள்ள மோகன்லாலின் வீட்டில் இருந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம், அப்போது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

யானை தந்தங்களை உரிய ஆவணங்களின்றி வீட்டில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்குமேல் ஆகியும், மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன் என போலீசாருக்கு, கேரள உயர்நீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், கேரள வனத்துறை, எர்ணாகுளம் கோர்ட்டில், கடந்த 20ம் தேதி, யானை தந்தங்கள் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மோகன்லால் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. விசாரணையை விரைந்து நடத்த வலியுறுத்தியும், வனத்துறை சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mohanlal forest department ivory possession chargeshheet

Next Story
“ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது” – கார்த்தி ட்வீட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express