திரிணமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற லாக்கின் மற்றும் பாஸ்வேர்ட் விவரங்களை தனது நண்பரும் தொழிலதிபருமான தர்ஷன் ஹிரானந்தனியிடம் கொடுத்ததாக வெள்ளிக்கிழமை
ஒப்புக்கொண்டார், ஆனால் அவரிடமிருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என்று கூறினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் டெஹாத்ராய் குற்றச்சாட்டை மறுத்தார்.
அதானி குழுமம் மற்றும் கவுதம் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாஜக எம்.பியான நிஷிகாந்த் துபே மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் அவர்மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், வரும் 31-ம்தேதி மொய்த்ராவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், “எந்த எம்.பி.யும் தன்/தனது சொந்தக் கேள்வியை டைப் செய்வதில்லை. நான் அவருக்கு (தர்ஷன்) பாஸ்வேர்டையும், அவரது அலுவலகத்தில் உள்ள ஒருவருக்கு லாக்கின் ஐ.டியும் கொடுத்தேன். கேள்விகளை டைப் செய்து அப்லோடு செய்வதற்கு கொடுத்தேன்” என்றார்.
கேள்வியைப் பதிவேற்ற, ஓ.டி.பி தேவைப்படும். "என்னுடைய ஃபோன் நம்பர் ஓ.டி.பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தர்ஷன் அல்லது வேறுயாரேனும் என்னுடைய அனுமதி இல்லாமல் கேள்வியை பதிவேற்ற முடியாது” என்றார்.
நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் முன் அக்டோபர் 31-ம் தேதி ஆஜராக மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ள நிலையில், அன்றைக்கு ஆஜராக இயலாது என்றும் நவம்பர் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்ம் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும், அதானி குழுமம் பற்றி நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய 9 கேள்விகள் "மிகவும் முக்கியமானது" என்றும் "தேச நலன் சார்ந்தது" என்றும் அவர் கூறினார்.
அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப பணம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பேசிய மொய்த்ரா, “பணம் எங்கே என்று சொல்லுங்கள்? இதில் முக்கியமானது இது quid pro quo வழக்கி என்று நிரூபிக்க வேண்டும். தர்ஷன் தனது பிரமாணப் பத்திரத்தில், தான் பிரதமர் (நரேந்திர) மோடியின் மிகப்பெரிய ரசிகர் என்று கூறியுள்ளார். அதானியை பற்றி அவர் என்ன கூறினார்? தேஹாத்ராய்யின் பிரமாணப் பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு நகைப்புக்குரியது என்றார்,
டெஹாத்ராய்யின் புகார் போலியானது என்று அவர் கூறினார். “தோல்வியுற்ற தனிப்பட்ட உறவைக் கொண்ட ஒருவரைப் போலிப் புகாரைப் பதிவு செய்யப் பயன்படுத்தியுள்ளார்கள், அதை ஆதரிக்க எனது நண்பரின் (தர்ஷன்) தலையில் துப்பாக்கியை வைத்துள்ளீர்கள். ஆனால் இரண்டும் பொருந்த வேண்டும்.. இது ஒரு மோசமான ஹிட் வேலை, ”என்றார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/moitra-admits-she-gave-login-password-to-hiranandani-denies-taking-cash-9002703/
"ஹிரானந்தனியின் பிரமாணப் பத்திரம் எங்களிடம் உள்ளது. ஆனால் அவர் எங்கும் பணம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை" என்று மொய்த்ரா கூறினார்.
அவர் விலையுயர்ந்த பரிசுகளை உங்களுக்கு கொடுத்தாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு, , “எனக்குத் தெரிந்த வரையில், தர்ஷன் ஹிராநந்தனி எனது பிறந்தநாளில் எனக்கு ஒரு ஹெர்ம்ஸ் ஃஸ்கார்ப் வாங்கிக் கொடுத்தார். நான் பாபி பிரவுன் மேக்கப் செட் கேட்டேன், அவர் எனக்கு மேக் ஐ ஷேடோ மற்றும் லிப் ஸ்டிக் வாங்கி கொடுத்தார் என்றார்.
மொய்த்ரா மும்பையிலோ அல்லது துபாயிலோ இருக்கும்போதெல்லாம், தர்ஷனின் கார் விமான நிலையத்திலிருந்து அவரை அழைத்துச் சென்று இறக்கிவிட்டதாகவும் கூறினார். "நான் உங்களுக்கு சரியான உண்மையைச் சொல்கிறேன், தர்ஷனால் அதைவிட அதிகமாக எதையும் நிரூபிக்க முடியுமானால். அவரிடம் இருந்து இதுவரை நான் வாங்கிய பணமோ வேறு எதுவும் இல்லை. நான் என் நேர்மையாக உள்ளேன், ”என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.