ஓடும் பேருந்தில் தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்த கேரளா போலீஸ்!

பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் கண் விழித்து பார்த்துள்ளனர்

Kallada bus driver : கேரளாவில் புகழ்பெற்ற கல்லடா டிராவல்ஸ் பேருந்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கு டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் சமூகவலைத்தளங்களில் வெளியான வீடியோவை இணையவாசிகள் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க மாட்டார்கள். கேரளாவில் 100க்கும் மேற்பட்ட சொகுசு பேருந்துகளை இயக்கி வரும் கல்லடா டிராவல்ஸ்க்கு சொந்தமான பஸ்சில் இளைஞர்கள் சிலர் பயணித்தனர். அப்போது குறித்த நேரத்தில் பஸ் அவர்களை பிக் அப் செய்யாததால், அந்த இளைஞர்கள் டிரைவரிடம் ஏன் லெட்? என்று கேட்டனர்.

அவர்கள் கேட்ட அந்த ஒரு கேள்விக்கு, பஸ்சின் டிரைவர் மற்றும் அவரின் உதவியாளர் இருவரும் சேர்ந்து அந்த இளைஞர்களை மாறி மாறி அடித்து உதைத்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது அதே டிராவல்ஸ்க்கு சொந்தமான மற்றொரு பஸ்சில் தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை நேர்ந்திருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூரில் நடைபெறும் மீட்டிங்கில் ஒன்றில் கலந்துக் கொள்ள கல்லடா டிராவல்ஸில் படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்தில் பயணம் மேற்கொண்டார். இரவு பயணம் என்பதால் அவர், அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இரவும் சரியாக 1.30 மணியளவில் பஸ் திருவனந்தபுரத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் டிரைவர் ஜான் அந்த பெண்ணிடம் சில்சிஷம் செய்துள்ளார். அதிர்ச்சியில் அந்த பெண் பலத்த குரலில் கத்த பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் கண் விழித்து பார்த்துள்ளனர். அதற்குள் டிரைவர் யாருக்கும் தெரியாமல் இடத்தை விட்டு நகர்ந்துள்ளார்..

மறுநாள் அந்த பெண், நேராக கேரளா காவல் நிலையம் சென்று கல்லடா டிராவல்ஸ் டிரைவர் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கேரளா காவல் துறையினர் டிரைவர் ஜான் மற்றும் அவரின் உதவியாளர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close