ராம் ஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. ஐந்து நீதிபதிகளும் இணைந்து ஒரே தீர்ப்பினை வழங்கினர். அதன்படி இஸ்லாமியர்கள் தங்களின் மசூதியை அமைத்துக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், மற்றும் எஸ். அப்துல் நாஸீர் மற்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த தீர்ப்பினை வழங்கியது.
தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், "இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களைப் போலவே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் அமைக்கப்பட வழி ஏற்பட்டுள்ளது. இந்தத் தருணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்.
சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய அந்த மக்கள் இயக்கத்தில் எனது பங்களிப்பையும் செலுத்த வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மசூதியா அல்லது கோயிலா என்ற நீண்டகாலப் பிரச்சினைக்கு விடை கிடைத்துள்ளது.