Monkeys snatched corona test samples, locals fear corona infection : உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் மீரட் மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக வரும் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க : அதிக அளவு சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்… தொகையை கேட்டால் தலையே சுற்றும்!
இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரத்த மாதிரிகளை ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் இருந்து குரங்கு கூட்டம் ஒன்று நுழைந்துள்ளது. அந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவரை நேரடியாக தாக்கி அவர் கையில் வைத்திருந்த ரத்த மாதிரிகளையும், பரிசோதனை கருவிகளையும் அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளன.
மேலும் படிக்க : இந்த சாலையில் பயணிக்க தைரியமும் துணிச்சலும் வேண்டும்? தில்லு இருந்தா இங்க போய்ட்டு வாங்க!
ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்ற குரங்குகள் அங்கிருந்த மரம் ஒன்றில் அமர்ந்து கடித்து துப்பியது. இந்த சம்பவத்தால் அங்குள்ள மனிதர்கள் பெரும் பீதி அடைந்துள்ளன. மேலும் இதனால் கொரோனா வைரஸ் பரவுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
உத்திர பிரதேசத்தில் இதுவரை 7 ஆயிரத்து 170 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 195 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.