குஜராத் மாநிலம், மோர்பியில் மச்சு ஆற்றில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில், 34 குழந்தைகள் உள்பட 135 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, துயரத்தில் மூழ்கியிருகும் நகரத்தைச் சுற்றி கோபம், துயரம் என கேள்விகள் எழுந்துள்ளன. இந்த தவிர்க்க முடியாத துயரம் பற்றிய கேள்விகளை இங்கே பார்ப்போம்.
அறுபது வயதான ஹேமந்த்பாய் பார்மர் “எனது குடும்பமே அழிந்துவிட்ட நிலையில் நான் இந்த பணத்தை வைத்து என்ன செய்வது?” என்று துக்கத்தால் தழுதழுத்த குரலில் கேட்கிறார். செவ்வாய்கிழமை காலை, மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் மோர்பி நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள நானா கிஜாடியா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று 16 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். ஹேமந்த்பாய் பார்மர் தனது இளைய மகன் கவுதம்பாய் (27), மருமகள் சந்திரிகா பென் மற்றும் ஒன்பது வயது, 5 வயதே ஆன அவருடைய இரண்டு பேரப் பிள்ளைகளையும் இழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, மோர்பி நகரின் வஜேபர் பகுதியில் வசிக்கும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்களான ஆசிப்பாய் மக்வானா (35), மற்றும் பிரபுபாய் கோகா (55) ஆகியோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு காசோலைகள் கிடைத்தன. மோர்பி பாலம் இடிந்து விழுந்ததில் மக்வானாவின் 7 வயது மகன் அர்ஷாத், கோகாவின் 19 வயது மகள் பிரியங்கா உட்பட மக்வானாவின் குடும்ப உறுப்பினர்கள் முன்று பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம், மோர்பியில் மச்சு ஆற்றில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில், 34 குழந்தைகள் உள்பட 135 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, துயரத்தில் மூழ்கியிருகும் நகரத்தைச் சுற்றி கோபம், துயரம் என கேள்விகள் எழுந்துள்ளன. இது தவிர்க்க முடியாத துயரமாகப் பார்க்கப்படுகிறது. இந்த துயர நிகழ்வு பற்றிய கேள்விகளை இங்கே பார்ப்போம்.
மக்வானா மற்றும் கோகா கடந்த 30 ஆண்டுகளாக அண்டை வீட்டார்களாகவும் குடும்ப நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர். மளிகைக் கடைகளில் பொருள் வாங்குவதில் இருந்து ஓய்வுநேர சுற்றுலாப் பயணங்கள் வரை அனைத்திலும் அவர்கள் ஒன்றாகவே இணைந்திருந்துள்ளனர். “என் சகோதரி பிரியங்கா குட்டிப் பையன் அர்ஷத்தை மிகவும் விரும்பினாள். அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டபோது, பிரியங்கா அர்ஷத்தின் ஆள்காட்டி விரலைப் பிடித்தபடி காணப்பட்டார். பாலம் அறுந்து இழுந்தபோது, என் அம்மாவும் அவர்களுடன்தான் இருந்தார். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்” என்று பிரபுபாயின் மகன் விக்ரம் கூறுகிறார்.
பாலத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பான தனியார் நிறுவனமான ஓரேவா நிர்வாகத்திடம் இருந்து இப்போது எங்களுக்கு பதில் வேண்டும் என்று துயரத்தில் இணைந்த இரண்டு குடும்பங்களும் கேட்கின்றனர்.
“மோர்பி நகராட்சியால் பாலம் நிர்வகிக்கப்படும்போது, பாலத்தில் 50 பேர் அனுமதிக்கப்படுவார்கள். பாலத்தின் நுழைவு பகுதியும் வெளியேறும் பகுதியும் கட்டுப்படுத்தப்படும். எத்தனை பேரை வேண்டுமானாலும் உள்ளே அனுமதிக்கும் சுதந்திரத்தை இந்த தனியார் நிறுவனத்திற்கு எப்படி கொடுக்க முடியும்? மேலும், 100 ஆண்டுகளாக, பாலத்தில் உள்ள மரப் பலகைகள் ஒருபோதும் மாற்றப்படவில்லை. ஆனால், பாலம் புதுப்பிக்கப்பட்டு பாலம் திறக்கப்பட்ட ஐந்தாவது நாளில், இந்த விபத்து நடக்கிறது – இதற்கு அர்த்தம் என்ன?” தனது மகன் அர்ஷத் மட்டுமில்லாமல் தனது மனைவி ஷபானோ (29), மற்றும் தாய் மும்தாஸ்பென், 62, ஆகியோரை இழந்த ஆசிப்பாய் துயரத்துடன் கூறுகிறார்.
“விபத்திற்குப் பிறகு, மீட்புப் பணிகள் அனைத்தும் உள்ளூர் மக்களாலும் சில மீனவர்களாலும் தங்கள் படகுகளைக் கொண்டு செய்யப்பட்டது. அரசு நிர்வாகம் மீட்பு பணிக்கு வருவதற்குள், ஏராளமானோர் இறந்திருந்தனர். எப்படியோ, அமைச்சர்கள் வந்துவிட்டார்கள், அவர்களின் வருகைக்கான ஏற்பாடுகளில் அரசு நிர்வாகம் மும்முரமாக இருந்தது” என்று விக்ரம் கூறுகிறார்.
மேலும், செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தபோது அங்கே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து, தனது தந்தை பிரபுபாய் மற்றும் ஆசிப்பாயின் தந்தை ஹபிபாய் ஆகியோர் அரசு மருத்துவமனையான ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவமனைக்குச் சென்றதாக விக்ரம் கூறினார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்கள் மத்தியில் எழும் ஒரு பொதுவான குரல் என்னவென்றால், “உயர் பதவியில் இருப்பவர்கள் மீது பழியைச் சுமத்துவதற்குப் பதிலாக, கீழ்மட்ட அதிகாரிகளை அரசாங்கம் கைது செய்துள்ளது” என்று கூறுகின்றனர்.
“ஒரேவா நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்படவில்லை. உறுதி தரச் சான்றிதழ் இல்லாமல் பாலம் திறக்கப்பட்டது தங்களுக்கு தெரியாது என நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், ஒரேவா நிறுவனமும் அதே போல ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது எப்படி? இந்த விபத்துக்கு பாலத்தை வடிவமைத்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று விக்ரம் கூறுகிறார்.
மோர்பி பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். “உயிரிழந்த 135 பேரின் உறவினர்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.5.4 கோடி நிவாரணத்தை நாங்கள் ஒப்படைத்துள்ளோம்” என்று மோர்பி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறையின் மம்லதார் பொறுப்பாளர் எச்.ஆர். சஞ்சலா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“