குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆரம்பம்: முதல் நாளில் 41 லட்சம் பேர் முதல் டோஸ் பெற்றனர்!

உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், தலா 1 லட்சத்துக்கும் அதிகமாகவே தடுப்பூசிகளை செலுத்தியுள்ளன.

உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், தலா 1 லட்சத்துக்கும் அதிகமாகவே தடுப்பூசிகளை செலுத்தியுள்ளன.

author-image
WebDesk
New Update
Children vaccination covid

More than 40 lakh children received the first dose of covid 19 vaccine

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி இயக்கத்தின் முதல் நாளான திங்களன்று, 41 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸ் பெற்றனர்.

Advertisment

15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 41,27,468 டோஸ் கோவாக்சின் செலுத்தப்பட்ட நிலையில், தற்காலிகத் தரவுகளின்படி, மொத்த தடுப்பூசி எண்ணிக்கை 146.71 கோடியைத் தொட்டது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 33,750 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,45,582ஐ தொட்டுள்ளது.

இதனிடையே” கோவிட்-19 க்கு எதிராக நமது இளைஞர்களைப் பாதுகாப்பதில் இன்று நாம் ஒரு முக்கியமான படியை எடுத்துள்ளோம். தடுப்பூசி போட்ட 15-18 வயதுக்குட்பட்ட எனது அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர்களின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். வரும் நாட்களில் அதிகமான இளைஞர்கள் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, திங்களன்று தடுப்பூசிகள் பட்டியலில் (15-18 வயது குழு) மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் முதலிடத்தில் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 7,71,615 டோஸ்களும், குஜராத்தில் 5,55,312 டோஸ்களும் பதிவாகியுள்ளன.

அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் (4,87,269), கர்நாடகா (4,14,723), மற்றும் ராஜஸ்தான் (3,57,018) ஆகிய மூன்று மாநிலங்கள் இந்த வயதினருக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகளை வழங்கியுள்ளன.

இருப்பினும், ஐந்து பெரிய மாநிலங்கள் இந்த வயதினருக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் மட்டுமே பதிவாகியுள்ளன: அதன்படி உத்தரப் பிரதேசம் (1,66,996); மகாராஷ்டிரா (1,81,561); மேற்கு வங்காளம் (1,03,564); பீகார் (1,70,603); மற்றும் தமிழ்நாடு (1,87,710)  ஆகிய மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தும் பட்டியலில், பின் தங்கியிருக்கின்றன.

மேலும் ஒடிசா (82,756); இமாச்சல பிரதேசம் (72,808); அசாம் (77,124); உத்தரகாண்ட் (72,075); மற்றும் ஹரியானா (66,217) என மற்ற ஐந்து மாநிலங்கள் 50,000 டோஸ்களுக்கு மேல் தடுப்பூசிகளை வழங்கியுள்ளன.

இந்தியா உலகின் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை அறிமுகப்படுத்திய ஒரு வருடத்திற்குள், டிசம்பர் 25 அன்று, பிரதமர் நரேந்திர மோடி 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசியை அறிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாட்டின் பாதிப்புகள் அதிகரித்து வருவதையும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும், பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்பு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை, அமர்வு தளங்களில் மாநிலங்களுடன் ஒரு கூட்டம் நடத்தினார். அதில், 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி குழு உறுப்பினர்களின் நோக்குநிலை மற்றும் பிரத்யேக அமர்வு தளங்களை அடையாளம் காண்பதை உறுதி செய்யுமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கோவாக்ஸின் இந்த வயதினருக்கான ஒரே தடுப்பூசி என்பதால், ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு முன்கூட்டியே விநியோகிக்க திட்டமிடுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

"நிர்வாகத்தின் போது தடுப்பூசிகள் கலக்கப்படுவதைத் தவிர்க்க, தனி கோவிட் தடுப்பூசி மையங்கள், அமர்வு தளங்கள், வரிசைகள் (அதே அமர்வு தளத்தில் வயது வந்தோருக்கான தடுப்பூசி தொடர்ந்து இருந்தால்) மற்றும் தனி தடுப்பூசி குழு இருக்க வேண்டும் என்று மாண்டவியா மாநிலங்களுக்கு கூறினார்.

திங்களன்று, சில ஊடக அறிக்கைகள், காலாவதியான தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, மத்திய சுகாதார அமைச்சகம், அறிக்கைகள் "தவறானவை மற்றும் முழுமையற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டவை" என்று ஒரு விளக்கத்தை வெளியிட்டது.

தடுப்பூசிகளின் அடுக்கு வாழ்க்கை "தடுப்பூசி உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட நிலைத்தன்மை ஆய்வு தரவுகளின் விரிவான பகுப்பாய்வு அடிப்படையில் தேசிய கட்டுப்பாட்டாளரால் நீட்டிக்கப்படுகிறது".

M/s பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் கடிதம் எண்: BBIL/RA/21/567 க்கு பதிலளிக்கும் விதமாக, 25 அக்டோபர் 2021 அன்று மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), கோவாக்ஸின் (முழு விரியன், செயலிழக்காத கொரோனா வைரஸ் தடுப்பூசி) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோல், கோவிஷீல்டின் அடுக்கு ஆயுட்காலம் 2021 பிப்ரவரி 22 அன்று 6 மாதங்களில் இருந்து 9 மாதங்களாக தேசிய கட்டுப்பாட்டாளரால் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: