ஜம்மு காஷ்மீரில் கூடுதல் படை வீரர்கள் குவிப்பு: சட்டம் 35 ஏ விவகாரம் - அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

Kashmir : காஷ்மீர் சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிப்பதால் இது முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள அரசின் புள்ளிவிவரங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

பாஷாரத் மசூத், நவீத் இக்பால்

அரசியலமைப்பு சட்டம் பிரிவு 35ஏ வை நீக்கும் மத்திய அரசின் முயற்சியால் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு மற்றும் கார்கில் மாவட்டங்களிலும் அச்சம் நிலவுகிறது. இதன் மூலம், மாநிலத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களை வரையறுக்க ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிப்பதால் இது முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள அரசின் புள்ளிவிவரங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

கூடுதல் படைகளை நிலைநிறுத்திய பின்னர், பள்ளத்தாக்கின் பெரும்பகுதிகளில் நிச்சயமற்ற தன்மை பரவியுள்ளது. இது 35ஏ பிரிவை ரத்து செய்யலாம் என்று கூறும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று அரசியல் தலைவர்களால் கருதப்படுகிறது. இதனால், பல பகுதிகளில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை அச்சத்துடன் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள் கூடுதல் படைகளை நிலைநிறுத்துவது என்பது ஒரு வழக்கமான நடவடிக்கை என்று கூறினார். மேலும், அவர்கள் மாநிலத்தில் ஏற்கெனவே பணியில் இருக்கும் சக ஊழியர்களை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, கிளர்ச்சியை ஒடுக்கும் படையை வலுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் கூடுதலாக 10,000 வீரர்களை காஷ்மீருக்கு அனுப்ப டெல்லி தலைமை கடந்த வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.
ஜம்மு – காஷ்மீர் காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டிஜிபி முனீர் கான் கூறுகையில், “கட்டாய பயிற்சிகளுக்காக வீரர்கள் அவர்களுடைய பட்டாலியன்களுக்கு செல்லும் 200 கம்பெனி வீரர்களுக்கு பதிலாக ஈடு செய்ய கூடுதல் படைகள் கோரப்பட்டுள்ளன” என்று கூறினார். ஆனால், மாநில டிஜிபி தில்பாக் சிங், கூடுதல் படைகள் வருவது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை என்று கூறினார்.

இந்த துருப்புகளின் முதல் தொகுதிகள் சனிக்கிழமை ஸ்ரீநகருக்கு புறப்படத் தொடங்கியது. ஜம்மு – காஷ்மீர் பள்ளத்தாக்கின் அரசியல் கட்சிகள், இது “முட்டாள்தனமான சாகசவாதம்” என்று மத்திய அரசை எச்சரித்துள்ளன. பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்படும் முன்னாள் மந்திரி சஜாத் லோன் கூறுகயில், “சாகசவாதம் என்பது தசாப்த வமுறைக்கான எதிர்கால முதலீடு என்று பொருள்படும். அது இந்தியத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களை அவமதிக்கிறது” என்று கூறினார்.

“எதைப் பற்றியும் யாருக்கும் தொலைநோக்கு சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை. 35ஏ பிரிவு தொடர்பான வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. இதற்கு மாநிலத்திடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ எந்த எதிர்வினையும் இல்லை” என்று சஜாத் லோன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், “அரசாங்கத்திற்கு, உண்மையில் இதுபோன்ற ஏதேனும் நோக்கங்கள் இருந்தால், அது சாகசத்தை ஏற்றுக்கொள்ள முடியாத வரம்புகளுக்கு நீட்டிப்பதற்கு ஒப்பாகும். எந்தவொரு சாகசமும் இந்தியா என்கிற கருத்தை நம்புபவர்களின் நம்பிக்கையை அழித்துவிடும்” என்று கூறினார்.

சட்டமன்றத் தேர்தல் தாமதமானதிலிருந்தே 35ஏ மற்றும் 370வது பிரிவை மத்திய அரசு அகற்றக்கூடும் என்ற புரிதல்கள் வளர்ந்து வருகின்றன, மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதியின் ஆட்சி நீட்டிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 35ஏ வை நீக்கும் மத்திய அரசின் முயற்சியால் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு மற்றும் காரில் மாவட்டங்களிலும் அச்சம் நிலவுகிறது. இதன் மூலம், மாநிலத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களை வரையறுக்க ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிப்பதால் இது முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள அரசின் புள்ளிவிவரங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.
அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான துணை ராணுவ வீரர்கள் ஏற்கனவே மாநிலத்தில் 10,000 கூடுதல் படை வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பிப்ரவரி 14 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், 100 கம்பெனி வீரர்கள் (10,000 வீரர்கள்) ஜம்மு காஷ்மீருகு அனுப்பப்பட்டனர், இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இத்தகைய பெரிய எண்ணிக்கையிலான துருப்புக்களை ஏன் பள்ளத்தாக்கிற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று கேட்டதற்கு, கூடுதல் டிஜிபி கான் தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “எங்களுக்கு விமானப்பயண செலவு மிகவும் குறைவு. அமர்நாத் யாத்திரை காரணமாக நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலாக உள்ளது, மேலும் துருப்புக்கள் அதிக எண்ணிக்கையில் நகர்த்தப்படும்போது, படையினர் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும்” என்று கூறினார்.

இது குறித்து டிஜிபி சிங் கூறுகையில், “இந்த கூடுதல் படைகள் கடந்த ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் இருந்து பயணியில் இருக்கும் கம்பெனி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும்” என்று கூறினார். மேலும், கூடுதல் துருப்புக்கள் வந்தவுடன், ஜம்மு – காஷ்மீர் காவல்துறை ஒரு வயர்லெஸ் செய்தியை அனுப்பியது. அதில், “கலகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் / கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி, டி.எஸ்.எம். போன்றவை” ஏதேனும் பற்றாக்குறை இருந்தால் தெரிவிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, அனைத்து காவல் நிலையங்களிலும் ஒரு செயற்கைகொள் தொலைபேசி. சாலைகளை மூடுவதற்கு தேவையான தகரங்கள், மற்றும் ஒரு புல்டோசர் ஆகியவற்றை வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
படைகளை கூடுதலாக குவிப்பது தொடர்பாக புட்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு மூத்த அரசாங்க அதிகாரியிடமிருந்து வெளியான ஒரு அறிக்கையுடன் ஒத்திருக்கிறது. அதில் அப்பகுதியில் உள்ள அனைத்து முக்கிய மசூதிகளின் இமாம்களின் விவரங்களை வழங்குமாறு வட்டாட்சியர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து, அரசு நிர்வாகம் பின்னர் கூறுகையில், இமாம்களை போதைப் பொருள் பிரசாரத்தில் ஈடுபடுத்த விரும்புவதாக கூறியது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு கூடுதலாக 10,000 துருப்புக்களை அனுப்பும் மத்திய அரசின் முடிவு மக்களிடையே ஒரு அச்ச மனநிலையை உருவாக்கியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் என்பது ஒரு அரசியல் பிரச்னை. அதை ராணுவ வழிமுறைகளால் தீர்க்க முடியாது. இந்திய அரசு அதன் கொள்கையை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, கூறுகையில், “மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கையை அளிக்க வேண்டும். மேலும், 35ஏ மற்றும் 370 சட்டப் பிரிவை நீக்குவது தொடர்பாக மாநிலத்தின் மக்களை தேவையில்லாமல் அச்சுறுத்துவதையும் கொடுமைப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார். மேலும், அவர் கூறுகையில், “காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள், அரசு நிர்வாகத்தால் வதந்தி பரப்பப்படுவதை அடுத்து கவலையில் உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரியாக இருந்து அரசியல்வாதியான ஷா ஃபேசல் கூறுகையில், “அரசியலமைப்பின் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் காஷ்மீரில் ஒரு புதிய அந்நியமாக்கலை வளர்க்கும்” என்று எச்சரித்தார்.
ஷா ஃபேசலுடன் கூட்டணி வைத்திருக்கும், அம்மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொறியாளர் ரஷீத் கூறுகையில், புதுடெல்லி தவறான செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close