scorecardresearch

அஜய் மிஸ்ரா மிஸ்ஸிங்… புகைப்படத்தை வெளியிட்டு பிரதமரிடம் கேள்வி எழுப்பிய காங்கிரஸ்

முன்னதாக பிரியங்கா காந்தி, அஜய் மிஸ்ராவுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் , அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அஜய் மிஸ்ரா மிஸ்ஸிங்… புகைப்படத்தை வெளியிட்டு பிரதமரிடம் கேள்வி எழுப்பிய காங்கிரஸ்

மத்திய உள் துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, வெள்ளிக்கிழமை அன்று லக்னோவில் நடைபெற்ற 56-வது டிஜிபி-க்கள்/ஐஜி-க்கள் மாநாட்டின் இறுதிநாள் கூட்டத்தில் பங்கேற்காதது புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

அரசு வெளியிட்ட புகைப்படத்திலும், பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படத்திலும் அவர் இல்லாதது, கடைசி நாள் கூட்டத்தை அவர் புறக்கணித்ததாக தெரிகிறது.

அந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன், அஜய் மிஸ்ராவும் மேடையில் அமர்ந்திருந்தார். சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

இதுதொடர்பாக அஜய் மிஸ்ராவை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.

இந்நிலையில், டிஜிபிக்கள்/ஐஜிக்கள் மாநாட்டின் புகைப்படத்தை ட்வீட் செய்த காங்கிரஸ், “இதில் அஜய் மிஸ்ராவை காணவில்லை. சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு நேரும் தோல்வியைக் கண்டு நரேந்திர மோடி பயந்துவிட்டாரா?” என கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக சனிக்கிழமையன்று, பிரியங்கா காந்தி, அஜய் மிஸ்ராவுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்குமாறும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mos ajay mishra absent on final day not seen in photos with pm modi

Best of Express