Advertisment

பொதுத் துறை வங்கிகளில் கல்விக் கடன்; தமிழ்நாடு டாப்

2023-2024 ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகளில் அதிக கல்விக் கடன் விண்ணப்பங்களுடன் தமிழ்நாடு முதலிடம்; தனியார் வங்கிகளில் மகாராஷ்டிரா முதலிடம்; மக்களவையில் மத்திய அரசு தகவல்

author-image
WebDesk
New Update
NEET Exam Preparation , NEET Exam Important Books to read , NEET Exam Self preparation

2023-24ல் பொதுத்துறை வங்கிகளில் 57,950 கல்விக் கடன் விண்ணப்பங்களை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது, இது 2019-20ல் 30,488 ஆக இருந்ததை விட அதிகமாகும், 2023-24ல் தனியார் துறை வங்கிகளில் அதிகபட்சமாக 15,243 விண்ணப்பங்களை மகாராஷ்டிரா பதிவு செய்துள்ளது, இது 2019-20ல் 4,892 ஆக இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகும், என்று கடந்த வாரம் மக்களவையில் ஒரு கேள்விக்கான பதிலில் மத்திய அரசு தெரிவித்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

90% கல்விக் கடன்கள் பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்படுகின்றனவா என்று ஜனசேனா கட்சியின் எம்.பி பாலசோவ்ரி வல்லபனேனி கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் இந்திய வங்கிகள் சங்கத்தின் தரவுகளை சமர்ப்பித்துள்ளார்.

2023-24 ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கல்விக் கடன் தொகை ரூ.28,699 கோடி என்றும், தனியார் வங்கிகள் ரூ.7,749 கோடி வழங்கியுள்ளன என்றும் சுகந்தா மஜும்தார் தனது பதிலில் கூறியுள்ளார்.

2023-24 ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்கிகளில் 56,947 விண்ணப்பங்களுடன் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா இருந்தது. தனியார் துறை வங்கிகளுடனான விண்ணப்பங்களைப் பொறுத்தவரை, 2023-24 ஆம் ஆண்டில் 9,506 விண்ணப்பங்களுடன் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கர்நாடகா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

பொதுத்துறை வங்கிகள் 2023-24ல் 4,65,965 கல்விக் கடன் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன, 2019-20ல் 2,87,309 விண்ணப்பங்களும், 2020-21ல் 2,26,690 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இருப்பினும், 2022-23ல் பதிவு செய்யப்பட்ட 4.87 லட்சம் விண்ணப்பங்களை விட 2023-24ல் இது சற்று குறைவாக இருந்தது.

கடந்த ஆண்டு, ராஜ்யசபாவில் கல்விக் கடன்கள் குறித்த இதேபோன்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, கோவிட் நெருக்கடி காரணமாக 2020-21 தவிர, “2018-19 முதல், பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன” என்று அரசாங்கம் கூறியது.

2018-19 ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன் தொகை ரூ.13,784 கோடி என்று அப்போது மத்திய அரசு கூறியிருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Loan Education Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment