Advertisment

தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் மும்பை முன்னிலை; பணமாக்குவதில் டெல்லி முதலிடம்: ஆர்.டி.ஐ

முதல் தவணை மார்ச் 2018 இல் விற்கப்பட்டதிலிருந்து, எஸ்.பி.ஐ.,யின் 17 கிளைகளில் ரூ. 10,791.47 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன, இருப்பினும் வங்கியின் 29 கிளைகள் அவற்றை விற்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன - ஆர்.டி.ஐ தகவல்

author-image
WebDesk
New Update
தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் மும்பை முன்னிலை; பணமாக்குவதில் டெல்லி முதலிடம்: ஆர்.டி.ஐ

Damini Nath

Advertisment

2018 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து விற்பனை செய்யப்பட்ட அனைத்து தேர்தல் பத்திரங்களில் சுமார் 65 சதவீதம், தரவுகள் கிடைக்கும் மிக சமீபத்திய கட்டம் வரை (அக்டோபர் 1-10, 2022), பாரத ஸ்டேட் வங்கியின் மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் கிளைகளில் விற்கப்பட்டன. ஆனால் இந்த காலகட்டத்தில் பணமாக்கப்பட்ட மொத்த பத்திரங்களில் 62 சதவீதம் புது டெல்லி கிளையில் இருந்ததாக எஸ்.பி.ஐ.,யிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தவணை மார்ச் 2018 இல் விற்கப்பட்டதிலிருந்து, எஸ்.பி.ஐ.,யின் 17 கிளைகளில் ரூ. 10,791.47 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டன, இருப்பினும் வங்கியின் 29 கிளைகள் அவற்றை விற்க அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று ஆர்.டி.ஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: 2024 மக்களவை தேர்தல்.. இந்துக்கள் மட்டுமல்ல… அடித்தளத்தை விரிவுப்படுத்தும் பா.ஜ.க.

இந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி வெளிப்படைத்தன்மை பிரச்சாரகர் கமடோர் லோகேஷ் பத்ராவுக்கு (ஓய்வு பெற்றவர்) அளித்த பதிலில், மும்பை (ரூ. 2,742.12 கோடி), கொல்கத்தா (ரூ. 2,387.71 கோடி) மற்றும் ஹைதராபாத் (ரூ. 1,885.35 கோடி) ஆகியவை தேர்தல் பத்திரங்கள் விற்பனையில் முதல் மூன்று கிளைகளாக இருந்தன என்று எஸ்.பி.ஐ தரவு காட்டுகிறது.

publive-image

புது தில்லி கிளை ரூ.1,519.44 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை விற்றாலும், பணமாக்கப்பட்ட பத்திரங்களில் பெரும்பாலானவை ரூ. 6,748.97 கோடி டெல்லி கிளையில் பணமாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஹைதராபாத் (ரூ. 1,384.03 கோடி) மற்றும் கொல்கத்தா (ரூ. 1,012.98 கோடி) கிளைகள் அடுத்த இடங்களில் உள்ளது என்று தரவு காட்டுகிறது.

இதுவரை, எஸ்.பி.ஐ.,யின் 14 பிராந்திய கிளைகளில் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் மற்றும் கேங்டாக் கிளைகளில் முறையே ரூ.50 லட்சம் மற்றும் ரூ.2.50 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பணமாக்கப்பட்டன, ஆனால், இரண்டு கிளைகளும் பூஜ்ஜிய விற்பனையை பதிவு செய்துள்ளன, என எஸ்.பி.ஐ தரவுகள் காட்டுகின்றன.

மார்ச் 2018 இல் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம், ஒரு வருடத்தில் நீண்ட காலத்திற்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சகத்தால் திருத்தப்பட்டது. நவம்பர் 7 திருத்தத்தின்படி, வழக்கமாக நான்கு 10 நாள் விற்பனைகளைத் தவிர, சட்டமன்றத் தேர்தல்களுடன் எந்த ஆண்டும் கூடுதலாக 15 நாட்கள் விற்பனையை அரசாங்கம் அறிவிக்க முடியும். இந்த ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 23வது தவணை பத்திரங்கள் விற்பனைக்கு வந்தன.

திட்டத்தை "வெளிப்படைத்தன்மை இல்லாதது" என்று கூறிய லோகேஷ் பத்ரா, இதுவரை விற்கப்பட்ட பத்திரங்களில் 93.67 சதவீதம் ரூ. 1 கோடி மதிப்பிலானவை என்று SBI தரவு வெளிப்படுத்தியுள்ளது, இது திட்டத்தின் கீழ் கிடைக்கும் மிக அதிக தொகை கொண்ட தேர்தல் பத்திரமாகும், என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment