Advertisment

சிறு, குறு தொழில் அனுமதி கொடுக்கும் வாரியத்தில் பாஜகவினருக்கு பதவி: காரணம் என்ன?

மத்திய அரசால் அமைக்கப்படும் இந்த வாரியத்தில் 20 நபர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்

author-image
WebDesk
New Update
Most non-official members in new MSME Board have BJP links

 Sandeep Singh , Sunny Verma

Advertisment

Most non-official members in new MSME Board : புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் எம்.எஸ்.எம்.இ. வாரிய உறுப்பினர்கள் 46 பேர் கொள்கை மறு ஆய்வில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். அதில் 26 நபர்கள் அரசு அதிகாரிகள். மீதம் உள்ள 20 பேர் தொழிற்துறையின் குரல்களாக இருப்பார்கள். தொழிற்துறை சார்பில் வாரியத்திற்கு வரும் உறுப்பினர் தேர்வில் அரசியல் முக்கிய பங்காற்றியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. அந்த 20 நபர்களில் பாஜக உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இருக்கும் லகு உத்யோக் பாரதி உறுப்பினர்களும் அடங்குவார்கள்.

எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு சட்டம் பிரிவு மூன்றின் படி, மத்திய அரசால் அமைக்கப்படும் இந்த வாரியத்தில் 20 நபர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அதில் மூன்றுக்கும் குறையாமல் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மூன்றுக்கும் குறையாமல் நுண் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இந்த பட்டியலை ஆய்வு செய்த போது ஒரு பாஜக எம்.எல்.ஏ, மூன்று முன்னாள் எம்.எல்.ஏக்கள் / வேட்பாளர்கள், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் ஏ.ஜே.எஸ்.யுவின் முன்னாள் எம்.எல்.ஏ, லகு உத்யோக் பாரதி உறுப்பினர்கள் 6 பேர், 6 பாஜக நிர்வாகிகள், எஃப்.ஐ.சி.சி.சி. உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் குஜராத்தில் இருந்து ஒரு உறுப்பினர் இந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

அரசியல் தொடர்பு உள்ளவர்கள் பின்வருமாறு: , பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ குந்தன் குமார், ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ பென்மேட்சா விஷ்ணு குமார் ராஜு, 2014 ஹரியானாவைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் யஷ்வீர் தாகர், ப்ரவத் கேஷரி மிஸ்ரா, ஒடிசா, 2009 ல் கட்டாக்கில் பாஜக வேட்பாளராக இருந்தார். இரண்டு நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார்.
டெல்லியை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் டீனா ஷர்மா, ரஷ்மி மிஸ்ரா பாஜகவின் புர்வான்சல் மோர்ச்சாவை சேந்தவர், பாஜக மணிப்பூர் பொருளாளர் ராபின் ப்ள்க்கேய், பஞ்சாப் பாஜக மாநில நிர்வாகி ராகேஷ் குப்தா, மகாராஷ்ட்ரா பாஜக உத்யோக் அகதி மாநில தலைவர் பிரதீப் பெஷ்கர், பாஜக யுவ மோர்ச்சாவின் துணைத் தலைவராகவும், குஜராத்தில் பாஜகவின் மாநில செயலாளராகவும் இருக்கும் பாஜக தலைவர் அமித் தாக்கரின் மனைவியான வதோதராவைச் சேர்ந்த பி-மெட் ஹைடெக் இயக்குநரான ஹேமல்பென் மேத்தா, பல்தேவ்பாய் கோவிந்த்பாய் பிரஜாபதி, லகு உத்யோக் பாரதி தலைவர், எல்.யூ.பி.யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரேஷ் சாந்த் பரீக், பி.ஜே.ஒய்.எம். முன்னாள் தேசிய நிர்வாகி மற்றும் எல்.யூ.பி.யின் செயலாளார் சம்பத் தோஷ்னிவால்.

நியமனம் செய்யப்பட்ட அந்த 20 நபர்களில் எஃப்.ஐ.சி.சி.ஐ அமைப்பின் மகளிரணியின் முன்னாள் தலைவர் ஹர்ஜிந்தர் கௌரும் இடம் பெற்றுள்ளார். அதே போன்று கர்நாடக எஃப்.ஐ.சி.சி.ஐ அமைப்பின் முன்னாள் தலைவரும், ப்ரீமியர் ஸ்டார்ச் ப்ரோடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவுமான ஜே.ஆர். பங்கேராவும் இடம் பிடித்துள்ளார். எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில்கள் ஏதும் கிடைக்கவில்லை. சில நபர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்றாலும், அவர்களுக்கு வணிக தொடர்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாரிய உறுப்பினர் டீனா ஷர்மாவைத் தொடர்பு கொண்டபோது, “நான் அசோச்சாம் இந்தியாவின் இயக்குநராக இருந்தேன், அங்கு நான் பெண்கள் பிரிவையும் பார்த்துக் கொண்டிருந்தேன், ஸ்டாண்ட்அப் இந்தியா-ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் முத்ராவில் பணியாற்றி வருகிறேன். அதனால்தான் நான் இந்த வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டேன். நான் ஒரு பெண்கள் மற்றும் குழந்தை உரிமை ஆர்வலர்… பெண்களின் நிதி சேர்க்கை மற்றும் கொள்கை வகுத்தல் உள்ளிட்ட பிற விஷயங்களில் எனக்கு அனுபவம் உள்ளது” என்று கூறினார்.

பாகல்பூரில் பட்டு கைவினைஞர்களின் முன்னேற்றத்திற்காக நான் பணியாற்றியுள்ளேன். கைவினைஞர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்காக பணியாற்ற நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று ராஷ்மி மிஸ்ரா கூறியுள்ளார்.

பெகுசராய் பாஜக எம்.எல்.ஏவை தொடர்பு கொண்ட போது அவர் மெக்கானிக்கல் என்ஜினியர் என்றும் சிறு நிறுவனங்களுடம் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார்.

நான் பேக்கேஜிங் பொருட்களின் வணிகத்தில் இருக்கிறேன், நான் சிறிய அளவிலான தொழில்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். முதல் கூட்டத்தில், சிறு வணிகங்கள் எதிர்கொள்ளும் ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி பேச உள்ளேன் என்று ஹரியானாவின் தக்கர் கூறினார்.

பாஜகவின் தொழில்துறை பிரிவின் மாநிலத் தலைவராக இருப்பதைத் தவிர, நான் நாசிக் தொழில்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன், லகு உத்யோக் பாரதியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தேன் என்று பெஷ்கர் கூறினார்.

நான் அகில இந்திய ஸ்டீல் ரீ-ரோலர்ஸ் சங்கத்தின் தேசிய நிர்வாக உறுப்பினர் மற்றும் ஸ்டீல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக உறுப்பினர் என்று கூறும் பஞ்சாபின் ராகேஷ் குப்தா எம்.எஸ்.எம்.இ. பிரிவை நடத்தி வருவதாகவும் பல்வேறு சங்கங்களில் உறுப்பினராக உள்ளதாகவும் கூறினார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் (எம்.எஸ்.யு) செனட் உறுப்பினராக இருந்து வருவதாகவும், குஜராத்தின் தொழில்துறை சங்கமான குஜராத் தொழில்கள் கூட்டமைப்பின் (எஃப்ஜிஐ) நிர்வாகக் குழுவில் இருப்பதாகவும் கூறினார் ஹேமல்பென் மேத்தா. ராஜு மற்றும் மிஸ்ராவுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு பதில்கள் ஏதும் கிடைக்கவில்லை.

எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு சட்டத்தின் படி அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் 26 பேர் உள்ளனர். அதன் தலைவராக நிதின் கட்கரி உள்ளார். இணை அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் 6 மாநில அரசின் அமைச்சர்கள், மூன்று எம்.பி.கள், யூனியன் பிரதேச நிர்வாகி, எம்.எஸ்.எம்.இ. செயலாளர், காமர்ஸ் மற்றும் இண்டெஸ்ட்ரி துறை, ஃபுட் ப்ரோசசிங் துறை, லேபர் மற்றும் திட்ட துறை செயலாளர்கள், தேசிய வங்கியின் தலைவர், சிறிய தொழிற்துறை வங்கியின் சேர்மென், ஐ.பி.ஏவின் சேர்மன், ஒரு ஆர்.பி.ஐ. உறுப்பினர், மூன்று சிறப்பு அதிகாரிகள், மத்திய தொழிற்சங்கங்களில் இருந்து இரண்டு பிரதிநிதிகள் மற்றும் இணை செயலாளர் பொறுப்பிற்கு கீழே இல்லாத ஒரு அதிகாரி ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

இணை அமைச்சர் ப்ரதாப் சந்திரா சாரங்கி துணை தலைவராக உள்ளார். உத்திரகாண்ட், ஹிமாச்சல், சிக்கிம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் அசாம் மாநில அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக உள்ளனர். sஅங்கர் லால்வானி (பாஜக), பீசெட்டி வெங்கட சத்யவதி (ஒய்,எஸ்.ஆர்.சி.பி), பந்தா பிரகாஷ் (டி.ஆர்.எஸ்) போன்ற எம்.பிக்களும் இதில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு அங்கீகாரம் பெற்ற உறுப்பினர்கள் பிரிவிலும் கூட அரசியல் முக்கிய பங்காற்றுகிறது. ப்ரவின் குமார் அகர்வால் சிலிகுரியின் மாவட்ட பாஜக தலைவர், ஸ்மிதா யஷ்வந்த் கைசஸ் (பொருளாதார நிபுணர்) லகு உத்யோக் பாரதியின் துணை தலைவர் , உத்பால் பரிக்கர் அயுரான் இம்ப்லாண்ட்ஸின் எம்.டி மற்றும் மறைந்த பாஜக தலைவர் மனோகர் பாரிக்கரின் மகன் ஆவார். இவர்கள் தான் இம்முறை சிறப்பு அங்கீகாரத்தின் படி வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்.

ரூ. 15,699.65 கோடி இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் எம்.எஸ்.எம்.இ.க்கு அனுப்பப்பட்டது. அதில் ரூ. 10 ஆயிரம் கோடி தகுதிவாய்ந்த எம்.எஸ்.எம்.இ கடன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசின் உத்தரவாத அவசர கடன் (Guarantee Emergency Credit Line (GECL)) வசதிக்கு ஒதுக்கப்பட்டது.

சி.ஐ.ஐ., எஃப்.ஐ.சி.சி.சி., அசோச்சம், மற்றும் பி.எச்.டி சிசிஐ போன்ற அமைப்பின் உறுப்பினர்கள் இல்லாத தற்போதைய வாரியம் போன்று இல்லாமல் முந்தைய வாரியத்தில் நான்கு முன்னணி தொழில் சங்கங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் உறுப்பினர்கள் இருந்தனர். இது சுயதொழில் மகளிர் சங்கம் (SEWA) மற்றும் தலித் இந்தியா வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ஆகியவற்றின் பிரதிநிதித்துவத்தையும் கொண்டிருந்தது.

(with Avinash Nair and ENS, Chandigarh).

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment