உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் - ஆமதாபாத்தில் மோடி முன்னிலையில், டிரம்ப் திறப்பு
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா கிரிக்கெட் மைதானத்தின் ( சர்தார் வல்லபாய் கிரிக்கெட் மைதானம்), பருந்துப்பார்வை புகைப்படத்தை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( BCCI) வெளியிட்டுள்ளது.

Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் 1லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையிலான உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணத்தின்போது, இந்த மைதானம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கு வரும் 24ம் தேதி வருகை தர உள்ளார். குஜராத் வரும் டிரம்ப், இந்த கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைக்க உள்ளார். இந்த மைதானத்தில் நடைபெற உள்ள “Kem Chho Trump” நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், பிசிசிஐ, இந்த கிரிக்கெட் மைதானத்தின் பருந்துப்பார்வை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. சமூகவலைதளங்களில் இந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.
இந்த பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தில், 2021ம் ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இலட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள், இங்கு அமர்ந்து அந்த போட்டியை ரசிக்க உள்ளதாக நெட்டிசன் அபிஷேக் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்த மைதானத்தை சமூகவலைதளங்களில் டிரென்டாக்கும் வண்ணம் #MoteraStadium #DayNightTest #NamasteTrump உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் நெட்டிசன்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மைதானத்தில் 3 வகை பிட்ச்கள் உள்ளிட்ட 11 பிட்ச்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்பின் பவுலிங் அல்லது பவுன்ஸ் மற்றும் இரண்டுக்கும் ஏற்றவகையில் இந்த பிட்ச்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.