/indian-express-tamil/media/media_files/2024/12/12/gEImsbpMJxFkMKl7jVsO.jpg)
புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.
புதுச்சேரியில் கிராமங்கள் தோறும் தன்னார்வலர்களை நியமித்து, விபத்து மற்றும் அவசர காலங்களில் ஒத்துழைக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.
புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி முன்னிலையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை அலர்ட் (ALERT - Amenity Lifeline Emergency Response Team) என்னும் தொண்டு நிறுவனத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (12.12.2024) கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்
வி. ரவிச்சந்திரன் மற்றும் அலர்ட் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் தராஜேஷ் ஆர். திரிவேதி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மருத்துவ சேவைகள் மற்றும் விபத்து ஏற்பட்டால், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அவசர முதலுதவிகளை அளிக்க தன்னார்வலர்களை தயார்படுத்த, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தன்னார்வலரை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து, அவர்களை தகுந்த நேரத்தில் பயன்படுத்துவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக அவசர மருத்துவ சேவைகளின் தரம் செயல்திறன் மேம்படுத்தப்படும்.
இந்த தொண்டு நிறுவனமானது, பொது சுகாதாரம் தொடர்பான பிரச்சாரங்கள் மற்றும் அவசரகால தயார்நிலை பதிலளிப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.