50 வருட திருமண வாழ்க்கையை புத்தகமாக எழுத நினைத்தோம் ! அனைத்தும் வீணாகிவிட்டது.. எவரெஸ்ட்டில் மனைவியை இழந்த கணவர் வேதனை

நிறைய சவால்களை சந்தித்தார்கள் ஆனால் ஒரு போதும் மனம் தளரவில்லை ஷரத் மற்றும் அஞ்சலியின் மகன் கண்ணீர்

நிறைய சவால்களை சந்தித்தார்கள் ஆனால் ஒரு போதும் மனம் தளரவில்லை ஷரத் மற்றும் அஞ்சலியின் மகன் கண்ணீர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mount Everest Expedition Deaths

Mount Everest Expedition Deaths

 Gargi Verma

Mount Everest Expedition Deaths : மே மாதம் இறுதி வாரம் எவரெஸ்ட் தினம் காரணமாக நூற்றுக் கணக்கான மக்கள் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி படையெடுக்க துவங்கினர். அங்கு நிலவிய மோசமான சூழ்நிலை காரணமாக 11 நபர்கள் உயிரிழந்துவிட்டனர். அதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 4 நபர்கள் ஆவார்கள்.

Advertisment

அஞ்சலி குல்கர்னி, ஒடிசாவின் கல்பனா தாஸ் மற்றும் புனேவின் நிஹல் பக்வான் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.  அஞ்சலி குல்கர்னி தன்னுடைய கணவர் ஷரத் குல்கர்னியுடன் எவரெஸ்ட் தொடரில் மலையேற்றத்திற்கு சென்றார். கடந்த 5 வருடங்களாக எவரெஸ்ட் மலைச்சிகரத்திற்கு செல்ல பயிற்சி பெற்று வந்தனர்.

மே 23ம் தேதி இந்த இணையினர் நான்காவது முகாம் மற்றும் எவரெஸ்ட் சிகரத்திற்கு மத்தியில் உடல்நிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இருவரும் அவதிப்பட்டு வந்தனர். மிகவும் சிரமப்பட்டு நான்காவது முகாமை அவர்கள் அடைந்த போதும், அஞ்சலி குல்கர்னிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட அவர் தன்னுடைய கண்கள் முன்னே மரணத்தை தழுவினார்.

என்னுடைய மனைவின் சடலத்துடன் கூட என்னால் 15 நிமிடங்கள் செலவிட இயலவில்லை. என்னுடன் மலையேற்றத்திற்கு வந்த ஷெர்பாக்கள் என்னை அங்கிருந்து உடனே அழைத்துச் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் என்னால் சரியாக பார்க்க கூட முடியவில்லை.

Advertisment
Advertisements

மனைவி இறந்த பின்பும் கூட எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து்விட்டார். தானே நகரில் பிறந்து வளர்ந்த இந்த தம்பதியினருக்கு சாந்தனு என்ற மகன் இருக்கின்றார்.   அவர் இந்த இழப்பு குறித்து பேசுகையில், எங்களின் குடும்பத்தினர் எப்போதும் விளையாட்டிற்கு அதிக அளவு முக்கியத்துவம் தருவோம். எங்களுடைய அனைத்து விடுமுறைகளையும் மலையேற்றப் பயிற்சியிலும் இமயமலைத் தொடர்களிலும் தான் கழித்தோம் என்று அவர் நினைவு கூறுகிறார் சாந்தனு.

நிறைய சவால்களை சந்தித்தார்கள் ஆனால் ஒரு போதும் மனம் தளரவில்லை - மகன்

கேதர்நாத்தில் வெள்ளம் சூழ்ந்திருந்த நிலையிலும் கூட அவர்கள் மான்சரோவருக்கு சென்றிருந்தார்கள். நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதும் கூட அவர்கள் அங்கு தான் இருந்தார்கள். அவர்கள் நிறைய சவால்களை சந்தித்தார்கள். ஆனால் ஒரு போதும் மனம் தளராமல் இருந்தார்கள்.

அஞ்சலியின் உடல் 30ம் தேதி தானேவில் இருக்கும் அவர்களின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, மே 31ம் தேதி இறுதி சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. அஞ்சலி இறந்துவிட்டாள் என்று கூறினால் யாருமே நம்பமாட்டார்கள். நாங்கள் 50 வருடம் சேர்ந்து வாழ்ந்து பின்னாள் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தோம். எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு பார்த்துவிட்டு வந்து வாழ்வினை கொண்டாட வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அனைத்தும் தற்போது வீணாய் போனது.

மேலும் படிக்க : எவரெஸ்ட்டை இலக்காக கொண்ட சாகச பயணங்கள்! கூட்ட நெரிசலால் அடிக்கடி நிகழும் மரணங்கள்… காரணம் என்ன?

இந்த தம்பதியினர் ஒரு மீடியா ஏஜென்ஸி வைத்து நடத்தி வந்தனர். அந்த தொழில் இருந்து முற்றிலுமாக கடந்த வருடம் வெளியேறிவிட்டு முழுக்க முழுக்க தங்களின் கவனத்தை மலையேற்றப் பயிற்சியில் செலுத்தினர். டார்ஜிலிங்கில் உள்ள ஹிமாலயன் மௌண்டனீரிங் இன்ஸ்ட்டிட்யூட்டில் பயிற்சி பெற்று வந்தனர். அம்மாவின் மரணம் எங்களுக்கு ஒரு பாரம். இந்த மரணத்தின் மூலம் நாங்கள் கற்றுக் கொண்ட விசயத்தை மற்றவர்களுக்கு கூறுவோம்.

வருங்காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபவர்களின் எண்ணிக்கையை நேபாள அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சாந்தனு கூறியுள்ளார்.

Mt Everest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: