Advertisment

அனுமனை தவறாக சித்தரிப்பதா? சர்ச்சையில் நடிகர் பிரபாஸ் படம்

அனுமன் தோல் ஆடைகள் அணிந்திருப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் இந்து மக்களை புண்படுத்துகின்றன எனவும் மத்தியப் பிரதேச உள்துறை (போலீஸ்) அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
MP home minister says Adipurush teaser contains objectionable scenes

ஆதிபுருஷ் படத்தின் டீசரில் வரும் அனுமன் காட்சி

ஓம் ராவுத் டைரக்ஷனில் பிரபாஷ் ஸ்ரீ ராமராக நடித்துள்ள படம் ஆதிபுருஷ். இந்தப் படத்தில் சயீப் அலிகான் ராவணன் வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் ஞாயிற்றுக்கிழமை அயோத்தியில் பிரமாண்டமாக வெளியானது. படத்தில் கிரிதி சனன் சீதாவாக நடித்துள்ளார்.

Advertisment

இந்தப் படத்துக்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

படத்தில் அனுமன் அவமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அனுமன் தோல் ஆடைகள் அணிந்திருப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் காட்சிகள் இந்து மக்களை புண்படுத்துகின்றன எனவும், இது தொடர்பாக இயக்குனர் ஓம் ராவுத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது படக்குழுவினருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதிபுருஷ் படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓம் ராவுத் தேசிய விருது பெற்ற தன்ஹாஜி படத்தை இயக்கியவர் ஆவார். ஆதிபுருஷ் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment