காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி ராஜ்யசபாவில் பேசினார்.
இன்று காலை ராஜ்யசபா கூடியது. கடந்த 16 நாட்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் போராட்டியதால் அவை முடங்கியிருந்தது. இன்று சபை கூடியதும், திமுக எம்பி கனிமொழிக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், வெங்கய்யா நாயுடுவிடம் காவிரில் மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசின் முடிவை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
கனிமொழி பேசியதாவது:
“முதலில் நான் அவைத்தலைவருக்கு நன்றி கூறி விரும்புகிறேன். காரணம், நீண்ட நாட்களுக்கு பின்பு பாராளுமன்றத்தில் பேச அனுமதி அளித்ததிற்கு. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்னுடைய பேச்சைக் கேட்க மற்ற எம்.பிக்களும் அனுமதியாக இருப்பது. நாங்கள் வேண்டும் என்றே அவையின் அமைதியைக் கெடுக்க நினைக்கவில்லை. இருந்தாலும், முக்கியமான பிரச்சனைக் குறித்து பேச வேண்டிய நேரம் என்பதால் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தோம்.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள மிக முக்கியமான பிரச்சனை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் உங்களுக்கு கண்டிப்பாக காவிரி விவகாரம் குறித்து முழுமையாக புரிந்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக பல ஆண்டுகளக காத்திருக்கின்றனர். மத்திய அரசு மிக விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன்.
சமீபத்தில் நடைப்பெற்ற எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் அவையில் இருந்து வேளியேறும் எம்.பிக்களுக்கும் என்னுடைய வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து அவர்கள் மக்களுக்கான பணியை செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இங்கிருக்கும் பலரை கண்டும் நான் வியந்து இருக்கிறேன். என்னை விட அனுபவத்திலும், வயதிலும் மூத்தவர்களை கண்டு நான் நிறைய கற்றுள்ளேன். காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி அவர்கள் மீண்டும் அவைக்குள் திரும்பி பார்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் நான் புதியதாக பாராளுமன்றத்திற்குள் அடியேடுத்து வைக்கும் போது என்னை புன்சிரிப்புடன் வரவேற்ற எம்.பி ரகுமான்கானிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றுடன் ஓய்வு பெறும் பாராளுமன்றத்தின் துணைத் தலைவர் பி ஜே. குரியன் அவர்களுக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரைப் பார்த்து நான் பல நாட்கள் வியந்தது உண்டு. அவையில் கூச்சலும், குழப்பமும் நீடிக்கும் போது அனைவரையும் கட்டுப்படுத்தி அமைதியை பேணிக் காக்கும் ஒரு வல்லமை அவரிடம் உள்ளது. ஒரு சிறந்த அரசியல் தலைவருக்கு இந்த சக்தி மிகவும் முக்கியம் என்று நான் கருகிறேன்” என்றார், கனிமொழி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.