திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை , திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பின் தொடர்வதை நிறுத்தி உள்ளார்.
இந்தியா டுடே கான்க்ளேவ் ஈஸ்ட் 2022 நிகழ்வின் போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா காளி சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். ” உங்கள் தெய்வத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம். காளி தெய்வம் இறைச்சி உண்ணும், மது அருந்தும். காளியை வழிப்படும் விதம் இடத்திற்கு இடம் மாறுபடும் “ என்று தெரிவித்திருந்தார்.
இது காளி போஸ்டர் கிளப்பிய சர்சையைவிட அதிகமான சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் தெரிவித்த கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை எனவும், இதுபோன்ற கருத்துக்களை திரிணாமுல் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கருத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும் பாஜக கட்சியினர் இவரை 10 நாட்களில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இவரை 10 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் 11வது நாள் நீதிமன்றத்திற்கு செல்லபோவதாக பாஜக தலைவர் சுவேந்து அத்ஹிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகார்ப்பூர்வ ட்விட்டர் கணக்கை , திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பின் தொடர்வதை நிறுத்தி உள்ளார். தற்போது அவர் மேற்கு வங்க முதல்வர் ட்விட்டர் கணக்கையும், டிஎம்சி supremo என்ற ட்விட்டர் கணக்கையும் பின் தொடர்கிறார்.