எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி தேர்தல் முடிவை பாதிக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

தேர்தல் நெருக்கத்தில் எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகமாக செலவு செய்கிறார்கள்.தேர்தலில் சிறிய அளவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருக்கத்தில் எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகமாக செலவு செய்கிறார்கள். இது தேர்தலில் மிக சிறிய அளவே பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

2009ம் ஆண்டு எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு இரண்டு கோடியாக இருந்தது. அதுவே 20011 -2014ம் ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு ஐந்து கோடியாக உயர்ந்தது. 2009ம் ஆண்டு எம்.பியாக இருந்தவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை கொஞ்சம் கொஞ்சமாகவே செலவு செய்தனர். 2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அதிகமான நிதியை எம்பிக்கள் செலவு செய்துள்ளனர் என்று யேல் பல்கலை கழத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஹாரி பிளேயரின் ஆய்வுகள் சொல்கின்றன.

ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை, குறிப்பிட்ட ஆண்டில் செலவு செய்ய முடியாவிட்டால் அடுத்த ஆண்டும் செலவு செய்ய முடியும். 2009 -2010ம் ஆண்டு 0.4 கோடி மட்டுமே எம்பிக்கள் செலவு செய்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அது அதிகரித்து 2013 – 2014ம் ஆண்டு அந்த தொகை அதிகரித்து, முழுத்தொகையும் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

தேர்தலுக்கு மும்பாக அதிக நிதி ஒதுக்கீடு செய்தது, தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைவிட கொஞ்சம் அதிகம் செலவு செய்துள்ளனர். முந்தைய ஆண்டைவிட கூடுதலாக ஒரு கோடி ரூபாய் செலவு செய்பவர்கள், தேர்தலில் வெற்றிக்கான வாய்ப்பு 0.13 சதவிகிதமே உள்ளது என அமைச்சரவை கொடுத்த புள்ளிவிபரங்களை ஆய்வு செய்த போது தெரியவந்தது.

இந்தாண்டுகளில் கூடுதலாக ஒரு கோடி செலவு செய்தால், அது வெற்றி வாய்ப்பை பிஜேபியினருக்கு 0.060 வாகவும், காங்கிரஸ் கட்சியினருக்கு 0.048ஆகவும், மற்ற கட்சியினருக்கு 0.409ஆகவும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்வது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களில் 80 சதவிகிதத்தினர் தோல்வியையும், பிஜேபி வேட்பாளர்கள் 87 சதவிகிதம் வெற்றி பெறவும் இந்த நிதி உதவியுள்ளது.

தரவுகளை ஆராய்ந்த போது, தேர்தல் போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகவும், பிஜேபி வேட்பாளர்களுக்கு சாதகமாகவும் இருப்பதை காண முடிந்தது.

2014ம் ஆண்டு தேர்தல் மிகவும் வித்தியாசமானது. 25 ஆண்டுகளுக்கு பின் பிஜேபி பெரும்பாண்மைப் பெற்றது. நாடு முழுவதும் சோர்வடைந்திருந்ததால், காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

இதன் மூலம் அரசியல் வணிக சூழ்ச்சி அல்லது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி தேர்தல் முடிவுகளில் பங்காற்றியிருக்கலாம் என்ற முடிவுக்கு ஆசிரியர் வந்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close