Advertisment

இந்திய திரைப்பட உலகின் பிதாமகன் மரணம்... திரைப்பட உலகினர் அஞ்சலி...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mrinal Sen, legendary filmmaker and Phalke awardee, passes away at 95

Film Director Mrinal Sen. Express archive photo by RL Chopra

Mrinal Sen Passes Away : தாதாசாகேப் பால்கே விருது, பத்ம பூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற வங்க இயக்குநர் மிருணாள் சென் இன்று மரணமடைந்தார்.  வங்க மொழி இயக்குநரான இவர் இந்தி, ஒடியா, தெலுங்கு போன்ற மொழிகளில் 30 திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 14 குறும்படங்களையும், 4 ஆவணப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.

Advertisment

Mrinal Sen Passes Away at 95

95 வயதான மிருணாளிற்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத காராணத்தால் இன்று காலை தன்னுடைய இல்லத்தில் மரணமடைந்தார்.  இந்தி மற்றும் இதர திரைப்படத் துறையினர் தங்களின் இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

1923ம் ஆண்டில் வங்க தேசத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். தன்னுடைய படிப்பினை கொல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

சினிமா திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி வந்த அவர் 1950களில் ஸ்டுடியோவில் ஆடியோ தொழில்நுட்ப பணியாளராக பணி புரியத் தொடங்கினார். பின்பு முழு நேர திரைப்பட பணிகளில் இறங்கியவர் ராத் போர் என்ற படத்தை முதலில் இயக்கினார். ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. நீர் ஆகாஷெர் நீச்சே - இவரை இந்திய அளவில் உயர்த்திக் காட்டிய திரைப்படமாக அமைந்தது.

நடுத்தர மக்களின் வாழ்வியலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மிகவும் அழகாக திரைக்கதைகளை உருவாக்கும் மிருணாள் சென்னின் புவன் ஷோம் - 1969ம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவிலான வெற்றியை பெற்று தந்தது அவருக்கு. அன்றைய காலக்கட்டம் தான், வங்கதேசத்தில் பெரிய போரும், நக்சலைட்களின் வளர்ச்சியும் கலகங்களும் நிலவி வந்தன. மிகக் குறைந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது.

கம்யூனிஸ்ட் கொள்கைகளால் அதிகம் ஈர்ப்புடையவர் மிருணாள் சென் என்பதால், அரசியல் நெருக்கடிகள், போராட்டங்கள், கிளர்ச்சிகள், பிரிவினைகள் மற்றும் பஞ்சத்தின் அடிப்படையை கொண்டும், மத்திய தர மக்களின் வாழ்வினையும், கொல்காத்தாவையும் மையமாக கொண்டு படங்கள் வெளியிடப்பட்டன.

2004ம் ஆண்டு தன்னுடைய சுய சரிதை புத்தகமான ஆல்வேஸ் பியீங்க் பார்ன் (Always Being Born) எழுதி முடித்தார். இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகரங்கிலும் தன்னுடைய கலைத் திறனால் பல்வேறு விருதுகளையும் பெற்றவர் மிருணாள் சென்.

மேலும் படிக்க : நாடக மேடைக் கலைஞர் மரணம்... தமிழ் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment