Advertisment

அமரப்பள்ளி மோசடி வழக்கு : சர்ச்சையில் சிக்கிய தோனி, சாக்‌ஷி...

அமரப்பள்ளி நிறுவனத்தின் மகி அமரப்பள்ளி என்ற நிறுவனத்தின் இயக்குநராக 2014 வரை செயல்பட்டு வந்துள்ளார் சாக்‌ஷி என அறிக்கையில் தகவல்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MS Dhoni's wife Sakshi linked with Amrapali fraud case

MS Dhoni's wife Sakshi linked with Amrapali fraud case

Sandeep Singh, Anil Sasi 

Advertisment

MS Dhoni's wife Sakshi linked with Amrapali fraud case : அமரப்பள்ளி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் வீடு கட்டுவதற்காக பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறி பலரும் புகார்கள் அளித்து வந்த நிலையில் அந்த நிறுவனம் குறித்து ஆய்வு செய்ய இரண்டு ஆடிட்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த அமைப்பு நேற்று தாக்கல் செய்த அறிக்கையின் படி, 47 அமரப்பள்ளி குழும நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் பணத்தினை ரியல் எஸ்டேட் பிசினஸில் இருந்து பெற்று அதனை, தங்களின் பல்வேறு கிளை நிறுவனங்களுக்கு கைமாற்றியது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் அந்த நிறுவனங்களில் ஒன்றான அமரப்பள்ளி மகி என்ற நிறுவனத்தின் இயக்குநராக தோனியின் மனைவி சாக்‌ஷி செயல்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. அமரப்பள்ளி மகி டெவலப்பர்கள் ப்ரைவேட் லிமிட்டட் Amrapali Mahi Developers Pvt Ltd (AMDPL) எனப்படும் அந்த குழுமத்தின் 25% பங்குகளை சாக்‌ஷியும் மீதம் உள்ள 75% பங்குகளை அமரப்பள்ளி நிறுவனத்தின் அனில் குமார் ஷர்மாவும் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. 2014ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் இயக்குநராக சாக்‌ஷி செயல்பட்டு வந்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் ரூ. 5,619 கோடி ரூபாயை தங்களுடைய நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்துள்ள நிலையில், இந்த பணத்தில் கணிசமான தொகையை அமரப்பள்ளி மகி நிறுவனம் பெற்றதும், அந்த நிதி அனைத்தும் ரொக்கமாக பெறப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு இந்த நிறுவனம் துவங்கப்பட்டது என்றாலும் அதனைத் தொடர்ந்து வந்த 3 நிதி ஆண்டுகளில் 9 2012, 2013, 2014) இந்த நிறுவனம் செயல்பட்டதற்கான ஒரு ஆவணமும் இல்லை. லாபம், நஷ்டம், எது போன்ற நடவடிக்கைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டது என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டது தெரிய வருவதற்கு முன்பு 2010ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அமரப்பள்ளி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக செயல்பட்டார். இந்நிறுவனத்திடம் தானும் 40 கோடி ரூபாய் முதலீடு செலுத்தியுள்ளார். அதனை எப்படியாவது எனக்கு மீண்டும் கிடைக்கும்படி செய்துவிடுங்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு தோனி வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று உச்ச நீதிமன்றம், இந்த பண மோசடி விவகாரத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் முறையாக விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு அறிவித்துள்ளது. காவல்துறை உதவியுடன் வழக்கு செல்லும் பாதையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோனியின் தலைமையில் செயல்பட்டு வந்த ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் ப்ரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்திற்கு அமரப்பள்ளி ஷேப்பையர் என்ற நிறுவனத்தின் நிதி 6.52 கோடி திருப்பிவிடப்பட்டுள்ளது என்பதையும் ஆடிட்டர்கள் கண்டறிந்துள்ளனர். ரிதி ஸ்போர்ட்ஸ் 2009 முதல் 2015 வரை இயங்கி வந்தது. கைமாற்றப்பட்ட இந்த நிதியானது வீடுகள் கட்ட அமரப்பள்ளி ஷேப்பையர் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment