ரித்து சரின்
மத்திய புலனாய்வுத் துறை, சிபிஐ சிறப்பு அதிகாரியான ராகேஷ் அஸ்தானா மீது லஞ்சம் வாங்கியதிற்காக வழக்கு பதிவு செய்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ராகேஷ் அஸ்தானா விசாரித்து வரும் லாலு பிரசாத யாதவ் வழக்கில் அலோக் வர்மாவின் தலையீடு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். அப்போது அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானாவின் மீது ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதனை திசை திருப்பவே தன் மீது புகார் தெரிவிக்கிறார் என்று அலோக் வர்மா மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி அவர் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றினை விசாரித்து வந்திருக்கிறார் ராகேஷ் அஸ்தானா. அந்த பண பரிவர்த்தனை முறைக்கேட்டில் ஐதராபாத்தினை சேர்ந்த சனா பாபுவினை விசாரித்து வந்தார் அஸ்தானா.
ராகேஷ் அஸ்தானா எழுதிய கடிதம்
இது தொடர்பாக கேபினட் செக்கரட்டரி ப்ரதீப் குமார் சின்ஹாவிற்கு அஸ்தானா எழுதிய கடிதம் ஒன்றில் ”அலோக் வர்மா பற்றி மிகவும் முக்கியமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது என்று கூறியிருக்கிறார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சனா பாபுவினை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க 2 கோடி ரூபாயை அலோக் வர்மாவிடம் கொடுத்ததாக அவர் புகார் கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பிப்ரவரி 20ம் தேதி அலோக் வர்மா தனக்கு போன் செய்து, சனாவின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சர்ச்சையில் சிக்கிக் கொண்ட ராகேஷ் அஸ்தானா
ஆனால் தற்சமயம் அஸ்தானா மீதும் இதே புகார்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சனாவினை இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் மட்டுமல்லாது அவருடன் வேலை பார்த்து மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சனா பாபுவிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகளிடம் அக்டோபர் 4ம் தேதி, ராகேஷ் தன்னிடம் லஞ்சம் வாங்கியதாகவும் அதற்கு, அவருடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உதவியாக இருந்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 14ம் தேதி ராகேஷ் அஸ்தானாவின் மீது வழக்கு பதிவு செய்தது.
அலோக் வர்மாவின் அஸ்தானா வைக்கும் குற்றச்சாட்டுகள்
சிபிஐ விசாரித்து வரும் முக்கிய வழக்குகளின் குற்றவாளிகளில் இருவர் வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்டு வருவதாகவும், இந்தியாவை விட்டு வெளியேற இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதாக அஸ்தானா குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சிபிஐ அவர்களின் பெயர்களை வெளிப்படையாக கூறவோ, அவர்களின் பாஸ்போர்ட்டினை முடக்கவோ மறுத்துவிட்டது.
அந்த இரண்டு நபர்களில் ஒருவர் நிலக்கரி ஊழல் வழக்கில் தேடப்பட்டு வருபவர், மற்றொருவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தேடப்பட்டு வருபவர் என தெரிய வந்துள்ளது.
ஹரியானாவில் நில கையகப்ப்படுத்தப்பட்ட வழக்கு ஒன்றில், ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்டுகள் மற்றும் நகர திட்டமைப்பு நிர்வாகிகள் பெயர் அடிபட்டுள்ளது. அதில் தங்களின் பெயர் சேர்க்க விரும்பாத குற்றவாளிகள் சிபிஐ இணை இயக்குநர் அருண் குமார் ஷர்மா மற்றும் வர்மா ஆகியோருக்கு 36 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இது போன்ற பல்வேறு முக்கியமான வழக்குகளில் எப்படி அலோக் வர்மாவின் பெயர் சம்பந்தப்பட்டிருக்கிறது என ஒரு பட்டியலையே வெளியிட்டிருக்கிறார் அஸ்தானா.