மொஹரம் நோன்பு 2018: இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இன்று மொஹரம் நோன்பினை உலகெங்கும் கடைபிடித்து வருகின்றனர். மொஹரம் மாதம், இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் ஆகும்.
மொஹரம் திருநாளில் கடைபிடிக்கப்படும் ஆஷூரா நோன்பு முந்தைய ஆண்டு செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்ய கடைபிடிக்கப்படும் நோன்பாகும். இந்த நோன்பினை கடைபிடித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.
எதற்காக மொஹரம் கடைபிடிக்கப்படுகிறது ?
இஸ்லாமிய மாதங்களில் நான்கு புனித மாதங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் ரம்ஜான் மாதத்திற்கு அடுத்தபடியாக கடைபிடிக்கப்படும் மிக முக்கியமான மாதம் மொஹரம் ஆகும். மொஹரம் என்பதற்கு மறுக்கப்பட்ட அல்லது பாவம் நிறைந்த என்பதே பொருளாகும்.
இறைதூதுவர் முகமது நபிகள் அவர்களின் பேரனும், சியா இஸ்லாமிய இனத்தின் மூன்றாவது இமாமுமான இமாம் ஹுசைன் அலி கர்பலா போரில் கொல்லப்பட்டார். அவரின் இறைப்பை நினைவு கூறும் விதமாக அஷூரா நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.
இமாம் தன்னுடைய இறப்பிற்கு முன்பு அனுபவித்த வலியினை உணரும் வகையில் தங்களை வதைத்துக் கொண்டு மொஹரம் நோன்பினை இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
சியா பள்ளிவாசல்களில் சோகமான பாடலகளை பாடியும், இரத்தத்தினை இறைவனுக்கு கொடுத்தும் இந்த நோன்பினை கடைபிடித்துவருகிறார்கள். மொஹரம் கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் நாள் முழுக்க உண்ணா நோன்பினை மேற்கொள்வார்கள்.