அமெரிக்க வர்த்தக பத்திக்கையான போர்ப்ஸ், உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
போர்ப்ஸின் இந்த பட்டியலில் மொத்தம் 106 இந்திய பணக்காரர்கள் இடம் பிடித்துள்ளனர். 40.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில், கடந்தாண்டு 19-வது இடத்தில் இருந்தார் முகேஷ் அம்பானி.
தற்போது 50 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு 6 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
தவிர, விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 36-வது இடத்திலும், ஹெச்.சி.எல் இணை நிறுவனர் சிவ் நாடார் 82-வது இடத்திலும், அர்ச்சிலர் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் 91-வது இடத்திலும், ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் 122-வது இடத்திலும் உள்ளனர்.
ஆர்காம் நிறுவனத் தலைவர் அனில் அம்பானிக்கு 1349-வது இடம் கிடைத்துள்ளது.
போர்ப்ஸின் உலகப் பணக்காரர்கள் வரிசையில் அமேசான் தலைவர் ஜெஃப் பேஜோஸ், பில்கேட்ஸ், வாரன் பாபெட் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.